book

ஹீப்ரு பிரமிடு நியூமராலஜி

Hipru Piramedu Neomaralogy

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எண்ணம்மங்களம் A. பழநிசாமி
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :240
பதிப்பு :2
Published on :2006
ISBN :9788181441263
Add to Cart

இந்திய நாகரிகமும், அறிவியல் மெய்ஞானமும் எவ்வளவு தொன்மை வாய்ந்ததோ அதைப் போலவே எகிப்திய நைல் நதிப்பிரதேச நாகரிகமும் பலசிறப்புகளை உடையது. பழமையான அவர்களது பிரமிடு கோபுரங்களே அதற்கு இன்றும் சாட்சியாக விளங்குகிறது. "பிரமிடு "களைப் பற்றி விஞ்ஞானிகளும், ஆய்வாளர்களும் ஆய்ந்து அதன் சிறப்புகளை நாள்தோறும் வெளியிட்டு வருகின்றனர். அதை அடிப்படையாகக் கொண்டு ஜோதிடத் துறையிலும், அதிர்ஷ்ட எண் விஞ்ஞானத்திலும் அதன் சிறப்பு,அதன்மூலம் மக்கள் தங்கள் வாழ்வை வளமாக்கிக் கொள்ளும் வழிமுறைகளை மக்களுக்கு சொல்வதே இந்த நூலின் நோக்கமாகும். தமிழ் மக்கள் தமது மதியினால் தனது பெயரில், அதனை உச்சரிப்பதில் அறிவு பூர்வமாக சிறு மாறுதல்களைச் செய்து தங்கள் உழைப்பின் மூலம் வாழ்வை எவ்வாறு வளமாக்கிக் கொள்ளலாம் என்பதையே இந்த நூல் விளக்குகிறது.
"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே" என்ற மெய்வாக்கிற்கிணங்க இந்த நூலின் ஆசிரியர் "ஹீப்ரு பிரமிடு" பெயரியல் அதிர்ஷ்ட எண் விஞ்ஞான மேதை திரு. பழனிச்சாமி அவர்கள் தமிழ்மக்கள் தங்கள் உழைப்பின் பயனான நன்மைகளை முழுவதும் அடையவேண்டும். வளமாக வாழ வேண்டும் என்ற நல்ல, சீரிய நோக்கத்தோடு இந்த நூலைப் படைத்துள்ளார்கள்.