book

நெருப்பு மலர்கள்

Neruppu Malargal

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஞாநி
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788189780685
குறிச்சொற்கள் :பெண்ணியம், பெண்ணுரிமை, முயற்சி, சரித்திரம், தகவல்கள்
Out of Stock
Add to Alert List

இன்றைய இந்தியப் பெண்கள் சுதந்திரமாகவும் சமூக அந்தஸ்தோடும் வீரநடை போட்டு, ஆண்களுக்கு நிகராக கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் முக்கியத்துவம் பெற்று வருகிறார்கள். அரசியல், நிர்வாகம், கம்ப்யூட்டர் என்று பல துறைகளிலும் காலடி வைத்து சாதனை படைத்து வருகிறார்கள்.
பல்லாயிரம் வருடங்களாக ஒடுக்கப்பட்டுக்கிடந்த பெண் சமுதாயத்துக்கு இந்த அங்கீகாரமும் வெற்றியும் எளிதாகக் கிடைத்துவிடவில்லை.

இது சாதாரண சமூக மாற்றம் இல்லை.

இந்திய விடுதலைப் போருக்கு நிகரான _ ஒரு தொடர்ச்சியான போராட்டத்தின் மூலம், அவமானங்களைத் தாங்கி, உறவுகளை இழந்து, ரத்தம் சிந்தி, உயிர்தியாகம் செய்து பெண்ணினம் பெற்ற வெற்றி என்றுதான் இதை முழங்க வேண்டும்.

அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கு எண்ணற்ற இன்னல்களைச் சந்தித்த பெண்களின் பெயர்கள் நமது பாடப் புத்தகங்களில்கூட இல்லை. அந்தச் சாதனைப் பெண்களின் வரலாறை தேடிக் கண்டுபிடித்து, தீவிரமாக ஆராய்ச்சி செய்து எழுதியிருக்கிறார் ஞாநி.

என்றென்றும் நமது நினைவுகளோடு கலந்த அந்தச் சாதனைப் பெண்களின் வீரதீரச் செயல்கள் 'அவள் விகட'னில் தொடராக வந்தபோது அனைத்து வாசகர்களும் உணர்வுபூர்வமாக விரும்பிப் படித்து வரவேற்றார்கள். என்றும் நினைவில் வைத்துப் போற்றும்விதமாக, அந்த 'நெருப்பு மலர்க'ளின் தியாக வரலாறுகளைத் தொகுத்து ஒரே புத்தகமாக வெளியிடுவதில் பெருமை அடைகிறேன்.