book

சந்தனக் காட்டு சிறுத்தை

Santhanakaatu Siruthai

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலகிஷன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :205
பதிப்பு :1
Published on :2004
குறிச்சொற்கள் :வீரப்பன், சரித்திரம், பிரச்சினை, நிஜம்
Out of Stock
Add to Alert List

வீரப்பனின் வாழ்க்கை தமிழக வரலாற்றின் ரத்த அத்தியாயம். இருபது வருடங்கள் பத்திரிகை, தொலைக்காட்சி அத்தனையிலும் பரபரப்பாக பவனிவந்தவன். தமிழகம், கர்நாடகம் என இரு மாநில போலீஸாருக்கும் சிம்ம சொப்பனமாக இருந்த அந்தக் காட்டுச் சிறுத்தையின் கதைதான் என்ன?
சந்தனமரக் கடத்தல், யானை வேட்டை, ஆள்கடத்தல்... என தன் ஒவ்வொரு அசைவிலும் காட்டுக்குள்ளிருந்தே நாட்டை அதிரவைத்த அவன் பின்னணி என்ன? சின்னஞ்சிறு ஆள்படை வைத்துக்கொண்டு வனஅதிகாரியிலிருந்து வி.ஐ.பி_க்கள் வரை கச்சிதமாகக் கடத்தி இரண்டு அரசுகளையே மிரட்ட முடிந்தது எப்படி? வீரப்பன் என்ற மனிதனுக்குள் இப்படி ஒரு மிருகம் எப்படி நுழைந்தது? இரக்கமில்லாத அந்த மிருகத்துக்குள்ளும் மனைவி, குழந்தை என குடும்பப்பாசம் வந்தது எப்படி? இப்படி ஏகப்பட்ட கேள்விக் குறிகளுக்கு விடைதேடும் முயற்சியாகத்தான் 'சந்தனக்காட்டு சிறுத்தை!' ஜூனியர் விகடனில் ஆரம்பிக்கப்பட்டது.

வீரப்பனின் அட்டகாசங்கள் உச்சத்தில் இருந்த சமயம் இந்தத்தொடர் ஜூ.வி.யில் வந்துகொண்டிருந்தது. நாளாக நாளாக, அதிரடிப்படையினரின் தேடுதல் வேட்டை தீவிரமானதும் வீரப்பனின் நடவடிக்கைகளிலும் மாற்றம் தெரிய ஆரம்பித்தது. அரசியல் மாற்றங்களும் வீரப்பனின் வாழ்க்கையை திசை திருப்ப ஆரம்பித்துவிட்டது. அதனைத் தொடர்ந்து, 'சரண்டர் _ பொதுமன்னிப்பு' என்று செய்திகள் வர ஆரம்பித்ததும் 'சந்தனக்காட்டு சிறுத்தை' தொடரை தற்காலிகமாக ஒரு 'இடைவேளை' விட்டு நிறுத்தியிருந்தோம். அதன் பிறகு தமிழ் தீவிரவாதிகள் தொடர்பு, ராஜ்குமார் கடத்தல், நாகப்பா கடத்தல் என்று விறுவிறுப்பான காட்சிகள் ஆரம்பித்தன.

கடைசியாக வீரப்பனின் மரணம் பல பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. வீரப்பன் வாழ்ந்த காடுகளிலேயே பல நாட்களாகச் சுற்றி வந்து, பல்வேறு தரப்பினரிடம் கேட்டறிந்த சம்பவங்களைத் தொகுத்து எழுதியிருக்கிறார் பாலகிஷன்.

இப்போது 'சந்தனக்காட்டு சிறுத்தை!' புத்தகத்தில் வீரப்பனின் கடைசிக் காலகட்ட நிகழ்ச்சிகளையும் சேர்த்து, முழுத் தொகுப்பையும் ஒரே புத்தகமாக வெளியிட்டிருக்கிறோம்.

துப்பாக்கியில் தொடங்கிய வீரப்பனின் வாழ்க்கை துப்பாக்கியிலேயே முடிந்துபோனது. வன்முறையின் பாதையில் நடக்கும் யாருக்கும் கதி இதுதான் என்பதற்கு வீரப்பனின் வாழ்க்கையும் சாட்சி!