book

ரமண பகவானும் திருக்கோயில்களும்

Ramana Bagavaanum Thirukoilkalum

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.ஆர். குமார்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184762914
குறிச்சொற்கள் :தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
Out of Stock
Add to Alert List

அருணாசலம் - அருவம்

பக்தியின் மூலம் முக்தியடைய விரும்பும் அனைத்து அன்பர்களுக்கும், இன்முகம் காட்டி நிறைவான அன்பு செலுத்தி, அவர்களை வழிநடத்திச் சென்ற மகான் ரமண பகவான்.

பரம்பொருளின் சொரூபமாக விளங்கும் 'திருச்சுழி வேங்கடராமன்' என்று அழைக்கப்படும் ஸ்ரீ ரமண மகரிஷி, 'நான் யார் என்ற கேள்வியை நமக்குள் கேட்க வேண்டும்.  இந்தக் கேள்வியே தேவையற்ற எண்ணங்களை எழவிடாமல், மனதை அடக்கும்.  அதுவே ஆத்ம தரிசனம்' என்கிறார்.

சைவ நெறிகளைப் பறைசாற்றும் தலைசிறந்த கோயில்களின் சிறப்புகளை எடுத்துக்கூறி, அதனோடு ஸ்ரீ ரமணர் கொண்டுள்ள பிணைப்புகளையும், அங்கு அவருக்குக் கிடைத்த ஆன்மீக அனுபவங்களையும் அழகு தமிழில், எளிய நடையில் தொகுத்து எழுதியிருக்கிறார் நூலாசிரியர் பி.ஆர். குமார்.


பகவான் ரமணரின் ஆன்மிகப் பின்னணி தெரிந்த பெரும்பாலோருக்கு, அவருடைய அற்புத நிகழ்வுகளின் பின்னணி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  இதுபோன்ற நிகழ்வுகளின் சாராம்சத்தை விளக்கியிருப்பதோடு சொல் எனும் செங்கல்லினால், பக்தி எனும் பரவசத்தை கலந்து அமைதியின் உருவமாகத் திகழும் ரமணருக்கு, ஒரு நூற்கோயிலைக் கட்டியிருக்கிறார் நூலாசிரியர்.