book

டீன் ஏஜ் கேள்விகள் நிபுணர்களின் பதில்கள்

Teen Age Kelvikal Nibunarhalin Pathilgal

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விகடன் பிரசுரம்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :கேள்வி-பதில்கள்
பக்கங்கள் :255
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184762662
குறிச்சொற்கள் :ஆலோசனைகள், உளவியல், வழிகாட்டி, முயற்சி, திட்டம், உழைப்பு, கற்பனை, சிந்தனை
Out of Stock
Add to Alert List

இளமைப் பருவம் என்பது கடந்தகாலம், எதிர்காலம், நிகழ்காலம் சார்ந்த எண்ணற்ற கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பக்கூடிய மனநிலையைக் கொண்டது. பெரும்பாலானவர்களின் வாழ்க்கை வளமானதாக இருப்பதற்கும் இன்னல்கள் நிறைந்தவையாக அமைவதற்கும் இந்தப் பருவத்தில் எடுக்கக்கூடிய முடிவுகள்தான் காரணம். டீன் ஏஜ் பருவத்தைக் கடக்கும்போது சில சந்தேகங்கள் சங்கடங்கள் எழும். அந்த நேரத்தில் என்ன செய்வது யாரிடம் ஆலோசனை கேட்பது என்று யோசிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அப்படிக் கேட்பதனால் தரம் தாழ்ந்துவிடுவோமோ, நம்மைத் தவறாக எண்ணிவிடுவார்களோ என்ற ஒரு எண்ணமும் கூடவே எழுவது சகஜம்தான். இப்படி சங்கோஜப்படும் இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் சரியான ஆலோசனைகளை வழங்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், ஆனந்த விகடன் இதழ்களில் ‘டீன் கொஸ்டீன்’ என்ற தலைப்பில் வெளிவந்து கொண்டிருப்பதுதான் இந்த கேள்வி_பதில் பகுதி. இந்த நூலில், இளைஞர்களின் மனதில் எழும் கல்வி, உளவியல், உடற்கூறு, சட்டம் ஒழுங்கு என பல்வேறு விதமான சந்தேகங்களுக்கு அந்தந்த துறையில் உள்ள நிபுணர்களே வழங்கிய ஆலோசனைகள், இளம் பருவத்தினருக்கு வழிகாட்டியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பெற்றோர்களுக்கும் உதவக்கூடியவை. பெரியவர்கள் பதின் பருவத்தைக் கடந்தவர்களாக இருந்தாலும் இன்றைய சூழலுக்கு ஏற்ப தன் பிள்ளைகளின் மன நிலையைத் தாமாகவே புரிந்துகொண்டு அவர்களை வழி நடத்தவும், வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொடுக்கவும் உதவும் இந்த நூல் ஒரு ‘டீன் ஏஜ் டிக்ஷ‌னரி!