book

ஸ்ரீ கருடபுராணம்

Sri. Garuda Puranam

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாராயண கிருஷ்ணமாச்சார்யர்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2010
ISBN :9789387303317
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம், வழிமுறைகள், கருத்து, சரித்திரம்
Add to Cart

தக்ஷப் பிரஜாபதி தனது பதின்மூன்று புத்திரிகளை கச்யப முனிவருக்குத் திருமணம் செய்வித்தான். அவர்களுள் கத்ரு,விநதை எனும் இருவரில் கத்ரு வாசுகி,ஆதிசேஷன் முதலிய ஆயிரம் பாம்புகளைப்பெற்றாள். ஆதிசேஷன் போன்ற பெருமைகளும், வீரமும் உடைய புதல்வர்கள் தனக்குப் பிறக்க அருள் புரியுமாறு கச்யபரை வேண்டினாள் விநதை. கச்யபர் விநதையின் கோரிக்கை நிறைவேற புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார்.   வாலகில்யர்கள் நடத்திய அவ்வேள்விக்குச் சென்ற கச்யபர் அவ்வேள்வியில் உதிக்கும் புத்திரன் பறவையாக இருக்கட்டும் என  அருளினார். விநதைக்கு முதல் மகனாக அருணனும், இரண்டாம் மகனாகக் கருடனும் தோன்றினார்.