book

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

Netaji Subash Chandira Bose

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அஜயன் பாலா
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :112
பதிப்பு :2
Published on :2009
ISBN :9788184762556
குறிச்சொற்கள் :தியாகிகள், சரித்திரம், தலைவர்கள், தகவல்கள்
Out of Stock
Add to Alert List

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான இடம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸக்கு உண்டு. ‘இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைந்தே தீரவேண்டும். அதற்கு ஒரே வழி போர். அதைத் தவிர வேறு வழியே இல்லை’ என்று நம்பியவர் நேதாஜி. அந்தத் தீவிரமான நம்பிக்கையின் விளைவுதான் அதிரடியாக அவரை போராட்டக் களத்தில் குதிக்க வைத்தது; துப்பாக்கி ஏந்த வைத்தது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானுடன் இணைந்து நேதாஜியின் ‘இந்திய தேசிய ராணுவப் படை’ பிரிட்டனுக்கு எதிராகப் போரிட்டது குறிப்பிடத்தக்கது. போர் சூழலில் நேதாஜியின் போர் வியூகங்களும், தாக்கும் முறைகளும் மிக நேர்த்தியானவை; தந்திரம் மிக்கவை. அவருடைய இந்த வித்தியாசமான அணுகுமுறையைக் கண்டு பிரிட்டன் ராணுவமே அதிர்ந்தது; ஓடி ஒளிந்தது. நேதாஜியின் அதிரடித் தாக்குதலைக் கண்டு ஜப்பான் பிரமித்து நின்றது; அவரைப் பாராட்டியது. இப்படி உலகமே அதிர அதிர இந்திய விடுதலைக்காகப் போரிட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வாழ்க்கை வரலாற்றை அஜயன்பாலா ‘ஆனந்த விகடன்’ இதழ்களில் எழுதினார். அவருடைய சுவாரஸ்யமான எழுத்து நடை பலரையும் வசீகரித்தது. ‘நாயகன்’ வரிசையில் வெளியான இந்தத் தொடரில் இன்னும் பல புதிய தகவல்கள் சேர்க்கப்பட்டு இப்போது நூல் வடிவம் பெறுகிறது.. விகடன் பிரசுரம் வெளியிட்டுவரும் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்களில் மற்றுமொரு நட்சத்திர நூல் இது.