book

இயற்கை தரும் இளமை வரம்

Iyarkai Tharum Ilamai Varam

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜம் முரளி
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :127
பதிப்பு :10
Published on :2010
ISBN :9788184762433
குறிச்சொற்கள் :அழகுக் குறிப்பு, ஆரோக்கியம், சத்துகள், வழிமுறைகள்
Add to Cart

இயற்கை தரும் இளமை வரம்

'அடுக்களையிலேயே இருக்கிறது அழகுக்கலை'  என்பதுதான் நம் முன்னோர்களின் சித்தாந்தம்.  நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களான பழங்கள், காய்கறி மற்றும் பூ வகைகளைக் கொண்டே அழகைப் பாதுகாக்கும் அற்புதக் கலையை அறிந்துகொள்ள யாருக்குத்தான் ஆசை இருக்காதுழ  இயற்கையாக்க் கிடைக்கும் உணவுப் பொருட்களைக் கொண்டே அகத்துக்கும் புறத்துக்கும் வேண்டிய ஆரோக்கியம் மற்றும் தற்காப்பு முறைகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

மா, பலா, வாழை, பேரீச்சை, ஆரஞ்சு, தர்பூசணி.. போன்ற பழ வகைகள், மல்லிகை, ரோஜா, சம்பங்கி.. போன்ற பூ வகைகள், தளசி, மரிக்கொழுந்து..  போன்ற மூலிகை வகைகளின் சிறப்புகளையும், அதில் ஒளிந்துள்ள சத்துகளையும், அவை நமது உடலின் அழகை எப்படிப் பாதுகாக்கிறது என்கிற விவரங்களை விளக்கும் விதமாக 'இயற்கை தரும் இளமை வரம்' என்கிற தலைப்பில் 'அவள் விகடன்' இதழ்களில் வெளியான கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல்.

'ஒரே கல்லில் இரண்டு மாங்காய்' என்பது போல, இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி உடலின் மேற்பரப்பில் எடுத்துக்கொள்ள வேண்டிய அழகுக் குறிப்புகளை ராஊம் முரளியும் அவற்றை உட்கொள்ளும் விதத்திலேயே ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்ளும் சூட்சுமத்தை டாக்டர் ஜீவா சேகரும் மிகவும் எளிமையாக விளக்கியுள்ளனர்.

'வயோதிகம் வந்துகொண்டே இருக்கிறதே. இளமையோடு கூடிய இனிய வாழ்க்கை நமக்குக் கிடைக்குமா?' என்று, அழகையும் ஆரோக்கியத்தையும் தக்கவைத்துக் கொள்ள ஆர்வம் காட்டும் அனைத்து வயதினருக்கும் இந்த நூல் சிறந்த பலாபலன்களைத் தரும்.

-ஆசிரியர்