book

ஆயிரத்தில் ஒருவன்

Aayirathil Oruvan

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே. பாண்டியராஜன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :பொது
பக்கங்கள் :102
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184762334
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, வெற்றி, திறமை, அனுபவங்கள்
Add to Cart

ஆயிரத்தில் ஒருவன்

ஐம்பது வருடங்களுக்கு முன்பெல்லாம், எஸ்.எஸ்.எல்.சி படித்திருந்தாலே ஏதோ நிறுவனத்தில் குமாஸ்தாவாக வேலை பார்த்து காலத்தை ஓட்டிவிடலாம்.  ஆனால், இன்று நிலைமை அப்படி இல்லை.  ஏராளமான பட்டதாரி இளைஞர்கள் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி அலைகிறார்கள்.

தொழிற்துறை, பொருளாதாரம், வேலை வாய்ப்பு வங்கித் துறை, தகவல் தொடர்பு, உற்பத்தித் துறை என எந்தத் துறையாக இருந்தாலும் கடும் போட்டிகள் நிலவுகின்றன.  இப்படி, போட்டிகள் நிறைந்த இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், வேலை வாய்ப்புக்கான திறமைகளை வளர்க்க அனைத்து வழிகளையும் சுட்டிக் காட்டுகிறார் நூலாசிரியர் 'மாஃபா' பாண்டியராஜன்.  ஒரு துறையில் தகுதி பெற்றவராக, ஆயிரத்தில் ஒருவராக தங்களைத் தாங்களே தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்திருக்கின்றன இந்தக் கட்டுரைகள்.

பல நிறுவனங்களைப் பற்றியும், அவற்றில் உச்சத்துக்கு வந்தவர்களைப் பற்றியும் பளிச்சென்று படம்பிடித்து காட்டுகிறது இந்த நூல்.  வெறும் 80 ரூபாய் ஜஸ்வந்திபென் தொடங்கிய அப்பளத் தொழில் இப்போது 300 கோடி ரூபாய்க்கு வர்த்தகமாவதையும், நலிந்த பிரிவினருக்கு சுயதொழில் செய்ய, 'கிராம வங்கி' மூலம் 28,000 பேருக்குக் கடன் வசதி செய்து தந்த யூனஸ், பொருளாதார பிரிவில் நோபல் பரிசு பெற்றதையும், மிகவும் சராசரி மனிதர்களாக இருந்து தங்களின் செயலாற்றி சாதனை படைத்தவர்களின் அனுபவங்களையும் விவரித்து எழுதப்பட்டிருக்கும் விதம் படிப்பவர்களின் மனதில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும்.

படித்துவிட்டு வேலைதேடும் இளைஞர்களும் நிறுவன ஊழியர்களும் அவசியம் படிக்கவேண்டிய நூல் இது.

-ஆசிரியர்