book

தேர்தல் 2009

Therthal 2009

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப‌. திருமாவேலன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184762013
குறிச்சொற்கள் :இயக்கம், தலைவர்கள், கட்சி, சரித்திரம்
Add to Cart

அக்னி நட்சத்திர காய்ச்சலுக்கு இணையாக அனல் வீசிக் கொண்டிருக்கிறது 2009 தேர்தல் களத்தில்! இமயம் முதல் குமரி வரையில், கையில் மைக் பிடித்து, தொண்டை வலிக்கக் குரல் எழுப்பி, வாக்குறுதிகளை அள்ளி வீசிக் கொண்டும், எதிர்க்கட்சிகள் மீது புழுதிவாரி இறைத்துக் கொண்டும் இருக்கிறார்கள் அரசியல்வாதிகள்! நாடு தழுவிய வாக்காளர்கள் முகத்தில் மென் புன்னகையுடன் இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்! மே-16 அன்று ஓட்டுகள் எண்ணப்பட்டதும், ஆட்சி அமைக்கும் உரிமை யாருக்கு வசப்படும் என்பதைக் கணிக்க முடியாத நிலை இப்போது! எதுவும் நடக்கலாம்; எப்படியும் நடக்கலாம் என்பதே பொதுவான அபிப்பிராயம்! 2009 தேர்தல் களம் குறித்த கணிப்புகள் மற்றும் ஆருடங்களைத் தவிர்த்து, ஆரம்பத்திலிருந்து இந்திய அரசியலையும், அரசியல் கட்சிகளையும் அலசும் விதமாக உள்ளே எட்டு கட்டுரைகளையும் எளிமையான நடையில் அமைத்திருக்கிறார் நூலாசிரியர் ப.திருமாவேலன். முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவில் ஆரம்பித்து, இன்றைய பிரதமர் மன்மோகன் சிங் வரை இந்தியாவின் பிரதமர்கள் பற்றியும், அவர்கள் அரியணை ஏறிய காலகட்டங்களில் நிலவிய அரசியல் பின்னணிகள் பற்றியும் துல்லியமாகப் பேசும் நூல் இது. 15வது நாடாளுமன்றத்துக்கு பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கப் போகும் வாக்காளர்களில், முதல்முறை ஓட்டுச் சாவடிக்குள் நுழைபவர்களும் கணிசமாக இருக்கிறார்கள். இவர்களுக்குக் கடந்தகால அரசியல் வரலாற்றைத் தெரிந்துகொள்ள இந்த நூல் பயனுள்ள கையேடாக உதவும். மற்றவர்களுக்குக் கடந்தகால நினைவலைகளைக் கிளறிவிடும்!