book

சிவாஜி வென்ற சினிமா ராஜ்ஜியம்

Shivaji Vendra Cinema Rajjiyam

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆரூர்தாஸ்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :சினிமா
பக்கங்கள் :240
பதிப்பு :3
Published on :2009
ISBN :9788184761627
குறிச்சொற்கள் :திரைப்படம், நடிகர், சரித்திரம், தகவல்கள்
Out of Stock
Add to Alert List

திரையுலக வரலாற்றை எழுதுவதானால், ‘சிவாஜிக்கு முன் _ சிவாஜிக்குப் பின்’ என்றுதான் சொல்லி எழுத வேண்டியிருக்கும். அந்த அளவுக்கு தமிழ் திரையுலகின் தன்னிகரற்ற நடிகராக விளங்கியவர் சிவாஜி கணேசன். சிவாஜி கணேசனின் நடிப்புலக வாழ்க்கையை ஆதி முதல் அந்தம் வரை அற்புதமாக விவரித்திருக்கும் ஆரூர்தாஸ், சிவாஜியின் நெருங்கிய நண்பராக இருந்ததன் மூலம் வேறு யாருக்கும் தெரிந்திருக்காத பல சுவாரஸ்யமான தகவல்களை இந்த நூலில் தொகுத்திருக்கிறார். சிவாஜி கணேசன் தன் நடிப்பாற்றலின் மூலம் நம்மை எப்படிக் கட்டிப் போடுவாரோ அதேபோல, ஆரூர்தாஸும் தனது எழுத்து வன்மையால் இந்த நூலில் நம்மைக் கட்டிப் போட்டிருக்கிறார். சிவாஜி கணேசனின் நடிப்புலக ஆசிரியராக சதா சர்வ காலமும் கையில் பிரம்புடன் சுற்றிவந்த சந்தானம் வாத்தியார், பின்னாளில் சிவாஜி கணேசன் மாபெரும் நடிகராக ஆன பிறகு அவருடைய படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க வரும்போது, கண்ணீர் மல்கச் சொல்லும் வார்த்தைகள்... பட்டு வேஷ்டியும், விசிறி மடிப்பு அங்கவஸ்திரமுமாக, சிவாஜியின் நாடகத்தை முன் வரிசையில் அமர்ந்து பார்த்துப் பாராட்டிய ஒருவர் பின்னாளில் சிவாஜியிடம் ஒரு வேலை கேட்டு வரும் சம்பவம்... பத்து படங்களுக்கு வசனம் எழுதவேண்டிய நெருக்கடி மிகுந்த நிலையிலும் சிவாஜியின் அன்புக் கட்டளைக்கு அடிபணிந்து ‘புதிய பறவை’க்கு விடிய விடிய உட்கார்ந்து வசனம் எழுதிய காட்சி... _ நூலாசிரியர் ஆரூர்தாஸ் வார்த்தையில் வடித்திருக்கும் வாழ்க்கைச் சித்திரங்கள் நம் நெஞ்சைவிட்டு நிச்சயம் அகலாது. ‘லட்ச ரூபாய்ல எத்தனை நூறு ரூபாய் இருக்கும்?’ என்று வெகுளியாகக் கேட்கும் சிவாஜி... ‘டேய் ஃபூல்! அண்ணன் கோபிச்சிக்கிட்டு தம்பிகிட்டே பேசாம இருக்கலாண்டா. ஆனா, தம்பி அண்ணனோட பேசாம இருக்கக் கூடாது. தப்பு எதுவா இருந்தாலும் நான் ஒனக்கு அண்ணன் இல்லியா? ஸாரி..!’ என்று நூலாசிரியரிடம், வெளிப்படையாக உரிமையுடன் பேசும் சிவாஜி... _ என சிவாஜியின் வெளியே தெரியாத பரிமாணங்களையும் இந்த நூலில் படம்பிடித்துக் காட்டுகிறார். வாருங்கள்... சிவாஜி எனும் நடிப்புலக சாம்ராஜ்ஜியத்தை ஆரூர்தாஸ் எனும் வழிகாட்டியின் மூலம் கண்டு ரசிப்போம்.