book

எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர்

Ettaavathu Vallal M.G.R

₹199.5₹210 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மணவை பொன். மாணிக்கம்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :304
பதிப்பு :11
Published on :2004
குறிச்சொற்கள் :தலைவர்கள், மக்கள் திலகம், எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர், இதிகாசவள்ளல், பொன்மனச் செம்மல்
Add to Cart

நீங்கள் சைவச் சாப்பாடா, அசைவ சாப்பாடா' இல்லை எம்.ஜி.ஆர் சாப்பாடு' என்று தமிழ் நாட்டில் பாதிப்பேர் நன்றி உணர்வோடு பொன்மனச் செம்மலைப் பற்றிப் பூரித்துச் சொல்லிக் கொண்டிருப்பதை , போகிற இடத்தில் எல்லாம் பார்த்தேன்.இப்படி, ஈரமும் -வீரமும் வாழ்வில் இரண்டறக் கலந்து எங்கும், எதிலும் , எப்பொழுதும் ஏகபோகச் சக்கரவர்த்தியாய் திகழ்ந்த இந்த இதிகாசவள்ளலைப் பற்றி எழுத எனது பேனா தலைகவிழ்ந்தால்தான்  இன்று நான் தலை நிமிர்ந்து நிற்கிறேன். இரண்டரை வயது இளங்குருத்தாக இலங்கையிலிருந்து அகதியாக வந்த நம் வள்ளல் தான். அதே இலங்கை அகதிகளுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கப் போகிற, விடிவெள்ளியாக்த் திகழப் போகிற தேவ மைந்தன் என்று தெரியாமலேயே அந்த தெய்வக்குழந்தை தமிழ் மண்ணில் கால் பதித்து இப்படிப்பட்ட அற்புதம் புராணங்களில் கூட நடந்ததில்லை. எட்டாவது வள்ளல் நூலின் 64 - வது அத்தியாயத்தில் இடம் பெறும் இந்த ஆரம்ப வரிகள். எட்டாவது கொடைவள்ளல் எம்.ஜி. ஆர். என்ற மக்கள் திலகம். பொன்மனச் செம்மலின் ஈடு இணையற்ற ஈகைக்  குணங்களையும் வறுமையில் வாடிய ஏழை எளிய மக்களிடம் அன்பு காட்டியதையும் வாரிவழங்கியதையும் எல்லோரும் தெளிவாக தெரிந்துயிருக்கிறார்கள். எட்டாவது வள்ளலின் நிழலாகவே நடந்து அவரை கண் எதிரே பார்ப்பதைப் போல - ஒரு உணர்வை - சிலிர்ப்பை - பிரமிப்பை மனக்கண் முன் நிறுத்தியிருப்பது.  இந்த வள்ளலின் காவியத்தை நீங்கள் சுவாசித்து விமர்சிக்க வேண்டும் எனபதில் விருப்பம் தெரிவித்து , இந்த மொட்டு நாளை மலரும், மணம் வீசும் என்ற நம்பிக்கையுடன்.

                                                                                                                                       மணவை பொன்மாணிக்கம்.