book

எது தெரிதல்? எது புரிதல்?

Ethu Therithal ?Ethu Purithal?

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ம. கோபிநாதன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2002
குறிச்சொற்கள் :திருக்குறள், மூலநூல், பொதுமறை,
Out of Stock
Add to Alert List

முதல் அத்தியாயத்திலிருந்து ஒன்பதாம் அத்யாயம் வரை நம் 'புரிந்து கொள்ளல்' உலகத் தொடர்புடன் அமைவதாயும் பத்தாம்
அத்தியாயத்திலிருந்து இருபதாம் அத்யாயம் வரை 'புரிந்துக் கொள்ளல்' நம்மைப் பற்றி அமைவதாயும் எழுதியிருக்கிறேன். பிறர் நம்மைப் புரிந்துக் கொள்ள வேண்டும் என்று நாம் எல்லோருமே எதிர்பார்க்கிறோம். நம் துறமையை, நிஜத்தை புரிந்துக்கொண்டு பாராட்ட வேண்டும்-நம் குறைகளைப் பெரிது படுத்தாமல் சாதாரணமாய் எடுத்துக்கொண்டு பிறகு மறந்துவிட வேண்டும் -நம் இயலாமை, கோபம், எதிர்பார்ப்பு இவற்றை சரியாய் புரிந்துக்கொண்டு பொறுமையாய், சகித்துக்கொண்டு தாங்கிக்கொள்ள வேண்டும். நமக்கு  வேண்டிய போதெல்லாம் வேண்டிய உதவிகளை வேண்டியவாறு செய்துவிட்டு விலக வேண்டும்- உபதேஸம் செய்யக்கூடாது- நம்முடன் அன்பாய்  கனிவாய் பேசவேண்டும். பிறரிடம் நாம் எதிர்பார்க்கும்  விஷயங்களை பட்டியல்  போட்டால் அது நீண்டுக் கொண்டே போகும்.மேலே சொல்லியது  விறு  அளவிதான். தெரிந்த விஷயம்தானே என்று அலட்சியப் போக்கில் படிக்க வேண்டாம். நம்மில் பலருக்கு இந்தத் தெரிந்த  விஷயங்கள் புரிந்ததாகத் தெரியவில்லை. அவர்களுக்குப் புரிந்திருந்தால் , செயல்புரிவதில், ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்ளலில், சூழ்நிலையைப் புரிந்துக்கொள்வதில் 'தெரிந்து இருக்கும் விஷயங்கள் பளிச்சிடும். ஆனால் நடைமுறையில் அவ்வறாக இல்லை. தெரிந்திருக்கும்  விஷயங்கள் தெரிந்த  அளவில்  மட்டுமே  இருந்து செயலில் கலக்காமல்  இருக்கின்றன. இதைத் தெளிவுப்படுத்தத்தான் இந்நூல்.

                                                                                                                                               ம. கோபிநாதன்.