book

விடிந்தது எழுந்து நில்

Vidinthathu Ezhunthu Nil

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வடிவுடையான்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2004
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம்
Out of Stock
Add to Alert List

உன் வாழ்வின் உயர்ந்த லட்சியத்தைத் தேடிக் கண்டடைய இந்த நூல் உனக்கு ஒர் உன்னதமான கை விளக்காகட்டும், நூலில்
நுழைவதற்கு முன் உன் மனதை இலகுவாக்கு. மூச்சுக் காற்றை உள்ளே இழுத்து ஆழமாக வெளி விடு. இதைப்பல முறை செய். உன் பழைய எண்ணக்குப்பைகளை சற்று தூக்கிவீசி எறிந்து விடு. புதிய மனதோடு உள்ளே தேடலைத் தொடங்கு. இதோ நீ திறக்கப் போவது முதல் வெற்றியின் கதவை, நிலையான மனதோடு சக்தி அனைத்தையும் திரட்டித் தட்டுகிறவனுக்குக்  கதவு திறக்கும். காசியில் மனிதர்கள் புனித மரணத்திற்காக்க் காத்திருக்கிறார்கள்.அரிச்சந்திரன் வேலை பார்த்த சுடுகாட்டில் எரிந்து சாம்பலாக இந்து அங்கே காத்திருக்கிறான். நான் அந்த சுடுகாட்டில் நெடுநேரம் தியானம் பழகினேன். மரணத்தை தியானமாக அணுகுகிறேன். சந்தனம் பூசிய உடல் கட்டையில் வேக உடலை சுமக்கிறேன். ஆன்மாவை சுமக்கும் ஓடம் அல்லவா உடல். ஆன்மாவை வளர்க்க உடலையும் வரக்கிறேன். உடலில் நின்று ஆன்மாவைப் பிரிக்க எவ்வளவோ தியானிக்கிறேன். மரணம் பழைய சட்டையை உதறி புதிய சட்டையைப் பெறுவதா? இந்த உடலை உதறி இனி எந்த உடலைப்பெறுவேன்? புளியங்காய் பழுத்தால் கனியும் ஓடும் இரண்டாகுமே அதை போலத்தான் மரணம். நீயும் நானும்  பழைய தலைமுறையும் ,  புதிய தலைமுறையும் சட்டையை மாற்றித்தானாக வேண்டும் . 

                                                                                                                                            வடிவுடையான்.