book

கடவுளாகிப் போன மனிதர்கள்

Kadavulagi Pona Manithargal

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுவாமி ராகவேந்திராதீர்த்த ஸ்ரீஹரி
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2006
குறிச்சொற்கள் :வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம், தவம், ஞானம்
Out of Stock
Add to Alert List

நமது இந்திய திருநாட்டில் தினம் தினம் ஆண்டவனின் திருவிளையாடல்களும் அவதாரங்களும் ஆங்காங்கே நடைபெற்றுக்
கொண்டிருப்பதால், இதை அவதார பூமி என்கின்றனர் ஆன்றோர்களும் , மேலை நாட்டினரும். அவதாரம் என்றால் எல்லாம் வல்ல பரம்பொருள் எளியனாம் தன்மை கொண்டு நமக்காக மேலிருந்து கீழிறங்கி வருவது என்று பொருள் . நாம் இறைவனை நோக்கி நூறடி எடுத்து வைப்பான்.  துறப்பதும் ,திறப்பதும் இருவேறு வழிகளாக இருந்தாலும் இறுதியில் சேருமிடம் ஒன்றுதான். சராசரியாக பிறந்து, சராசரியாக வாழ்ந்து  எப்படி இறைவனானார்கள்? அவர்கள் காட்டிய நன்நெறி வழியென்ன்  என்பதையறிந்து நாம் பயணித்தால், நாமும் இறைவனையடையலாம். இந்த பயணத்தின் முடிவு நபருக்கு நபர் மாறுபடும். சிலர் இறைவனால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். திருஞான சம்பந்தர், அருணகிரிநாதர் போன்று, சிலர் கடவுளைத் தேர்ந்தெடுக்கின்றனர். கடசியில் கடவுளாகிப் போகின்றனர். ஒவ்வொரு ஆத்மாவும் இறுதியில் இறைவனை அடைந்தே தீர வேண்டும். பணம், பதவி, புகழ், அவலங்கள், அசிங்கங்கள் போன்றவற்றின் மத்தியில் வாழ்வதற்கா நாம் பிறவியெடுத்தோம்!  இல்லை. பிறவிப்பயனை அனைவரும் அடைந்தே தீரவேண்டும் என்ற நோக்கம்தான் அத்தனைபிறவிக்கும் காரணம். பிறவிஎனும் பேதமை நீங்கி கடைநிலையிலிருந்து கடவுளாகிய போனவர்கள் பட்டியலில் நாமும் ஏன் இடம்பெறக்கூடாது.

                                                                                                                                           -பதிப்பகத்தார்.