book

குற்றவாளிகள் ஜாக்கிரதை

Kutravaligal Jagirathae

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.பா. மாதவ சோமசுந்த‌ரம்,இலக்குமணன் கைலாசம்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788184761405
குறிச்சொற்கள் :வழக்கு, நிஜம், தகவல்கள், தொகுப்பு
Out of Stock
Add to Alert List

ஒரு குற்றம் நிகழும் போது அதை செய்தியாக வாசிக்கும் நாம் முதலில் லேசாக அதிர்ச்சி அடைவோம். சிறிது நேரம் வருத்தப்படுவோம். பிறகு, ஒரு கோப்பை தேநீர் குடித்துவிட்டு நமது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவோம். கோர்ட்டில் வழக்கு நடக்கும். சிறிது காலம் கழித்து தீர்ப்பு வரும். குற்றவாளி சிறைக்குச் செல்வார் அல்லது அபராதம் கட்டி வெளியே வருவார். வழக்கறிஞர்கள் அடுத்த கேஸ் கட்டை தூசி தட்டி எடுக்கப் போய்விடுவார்கள். காவலர்கள் லத்தியைச் சுழற்றியபடி அடுத்த குற்றவாளியைத் தேடிப் போய்விடுவார்கள். ஆனால், இந்தக் குற்ற நிகழ்வுக்கு இன்னொரு இருண்ட பக்கம் உண்டு. யாரும் இதுவரை எட்டிப் பார்த்திராத பக்கம்! அங்கு குற்றத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் கண்ணீர் விட்டபடி கதறிக் கொண்டிருப்பார். இத்தனைக்கும் அவர் எந்தக் குற்றமும் செய்திருக்கமாட்டார்! ஒரு திருட்டு நடக்கிறதா? பெரும்பாலான நேரங்களில் போனது போனதுதான். அபூர்வமாக சில நேரங்களில் திருட்டு போன பொருளை தேடிப் பிடித்துக் கொடுப்பார்கள். ஆனால், பொருளை இழந்ததால் அந்த நபர், மன உளைச்சல், வேதனை, தவற விட்ட வாய்ப்புகள் என எண்ணற்ற துயரங்களை அனுபவித்திருப்பார். அதற்கு எந்த நாட்டுச் சட்டமும் இதுவரை எந்தவொரு கரிசனமும் காட்டியதில்லை. கொலை, கற்பழிப்பு போன்ற குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். மீள முடியாத நரகத்துக்குள் நுழைந்ததுபோல்தான். ஆனால், உலக அளவில் இப்போது பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையிலான கோட்பாடுகள், நடைமுறைகள் புழக்கத்துக்கு வர ஆரம்பித்துள்ளன. தமிழில் இந்த நூல் அதற்கான முதல் விளக்கை ஏற்றி வைத்திருக்கிறது. நாட்டில் நடக்கும் குற்றச் செயல்களை பொது கவனத்துக்குக் கொண்டுவரும் அரிய செயலை 25 வருடங்களுக்கும் மேலாக ஜூனியர் விகடன் ஆற்றிவருவது வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும். இந்த நூல் ஜூ.வி.யில் வெளியான செய்திகளை ஆதாரமாகக் கொண்டு, பாதிக்கப்பட்டோருக்கு இந்த சமூகம் ஆற்ற வேண்டிய அத்தியாவசியக் கடமைகளை விரிவாக விளக்குகிறது. குற்ற பாதிப்பில் இருந்து ஒருவர் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் வழிகளையும் விளக்குகிறது.