book

சதுரகிரி யாத்திரை

Sathuragiri Yathirai

₹165+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி. சுவாமிநாதன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :231
பதிப்பு :14
Published on :2016
ISBN :9788184761238
குறிச்சொற்கள் :தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம்
Add to Cart

இறையருள் பெற்று இனிமையுடனும் நிம்மதியுடனும் வாழ்வதற்கு நமது சாஸ்திரத்திலும் வேதங்களிலும் ஏராளமான வழிமுறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றுள் க்ஷேத்திராடனம் முக்கியமான ஒன்று. தரிசனம் செய்ய வேண்டிய புனிதத் தலங்கள் என்று காசி, ராமேஸ்வரம் போன்று பல இடங்கள் சிறப்பித்துச் சொல்லப்படுகின்றன. இத்தகைய தலங்களுள் மலைகளுக்கும் முக்கியத்துவம் உண்டு. வழிபாட்டில் கயிலாய மலை, பர்வத மலை, கொல்லிமலை, வெள்ளியங்கிரி மலை, திருவண்ணாமலை என்று ஏராளமான மலைப் பிரதேசங்கள் போற்றிப் புகழப்படுகின்றன. இத்தகைய மலைத் தலங்களுள் சதுரகிரியும் குறிப்பிடத்தக்க ஒன்று. சதுரகிரியின் மலைப்பகுதிக்கு மேலே இருக்கும் நூற்றுக் கணக்கான குகைகளில் சித்தர் பெருமக்கள் எண்ணற்றோர் இன்றைக்கும் அரூபமாக வீற்றிருந்து சித்து விளையாட்டுகள் புரிகிறார்கள். சக்தி விகடன் இதழில் புராண முக்கியத்துவம் வாய்ந்த சதுரகிரி பற்றி சிறப்பான தொடர் ஒன்று வெளியானது. 'குடந்தை ஸ்யாமா' என்ற புனைபெயரில் பி.சுவாமிநாதன் எழுதிய அந்தத் தொடர் வெளியாகும்போதே, அது தொடர்பான ஆன்மிக அன்பர்கள் பலர் தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்கள். உலகெங்கும் உள்ள எத்தனையோ பக்தர்களுக்கு, சதுரகிரி என்கிற அற்புத க்ஷேத்திரத்தை அறிமுகப்படுத்திய 'சதுரகிரி யாத்திரை' தொடர் கட்டுரைகள், இப்போது புத்தக வடிவில், உங்கள் கரங்களில் தவழ்கிறது. சுவையான தகவல்கள், சிலிர்ப்பான அனுபவங்கள், சென்று திரும்புவதற்குத் தேவையான குறிப்புகள்... என்று ஒரு முழுமையான தொகுப்பாக இந்த நூல் மலர்ந்துள்ளது. சதுரகிரி பயணம் செய்ய விரும்பும் ஆன்மிக அன்பர்களுக்கு இந்த நூல் அரியதொரு பொக்கிஷமாக அமைந்து உதவும்!