book

தத்துவ ஞானம்

Thathuva Gnyanam

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வேங்கடம்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :207
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788184761184
குறிச்சொற்கள் :தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம்
Out of Stock
Add to Alert List

மதம், சாதி அமைப்பு, உருவ வழிபாடு என்பதெல்லாம் மக்களின் வசதிக்காக உருவாக்கப்பட்டவை. கடவுள் இருக்கிறார்; இல்லை என்பதெல்லாம் இங்கு முக்கியமானவை அல்ல. நமக்கும் மேலே ஒருவர் இருக்கிறார். அவர், நம்மைவிட அதிக சக்தி பெற்றிருக்கிறார். நம்மைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அவருக்கு இருக்கிறது. நாம் செய்யும் நன்மை, தீமைகளை எல்லாம் அவர் கவனித்துக் கொண்டிருக்கிறார். நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்றார் போல நமக்கு தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கைதான் உலகத்தை வழி நடத்திச் செல்கிறது. ஒவ்வொரு மதத்துக்கும் ஒவ்வொரு சித்தாந்தம் உண்டு; கொள்கையும், கோட்பாடுகளும், தத்துவ உபதேசங்களும் உண்டு. ஆனால், இவை எல்லாமே ஏதோ ஒரு நூலிழையில் ஒன்று சேர்வதை நம்மால் உணர முடியும். 'தத்துவங்கள் என்பது என்ன? தத்துவங்கள் யாருக்காகத் தோன்றின? கடவுள் இருக்கிறார் என்று இதுவரை யாராவது நிரூபித்திருக்கிறார்களா? கடவுள் இல்லை என்று மறுப்பவர்களாவது, உலக மக்கள் நம்பும்படியாக அதை நிரூபித்திருக்கிறார்களா?' போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு இந்த நூலில் விடைதேட முயன்றிருக்கிறார் வேங்கடம். 'அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஓர் உண்மை என்று உலகில் ஏதும் இல்லைஒ என்ற உண்மையை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். 'சாதாரணமான உண்மையிலிருந்து அசாதாரணமான பேருண்மையைத் தேடுவது எப்படி?' என்ற வழிமுறைகளை இந்நூல் மிக மிக எளிமையான உதாரணங்கள் மூலம் விளக்குகிறது. தொடர்ந்து தத்துவஞானத் தேடலில் ஈடுபட விரும்பும் ஒருவருக்கு இந்நூல் நிச்சயம் ஒரு நுழைவு வாயிலாக இருக்கும்.