book

குற்றப் பரம்பரை

Kutra Parambarai

₹450+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வேல ராமமூர்த்தி
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :448
பதிப்பு :1
Published on :2015
ISBN :9789384301040
Add to Cart

மனித குலத்தின் வரலாறுகளை வரலாற்று ஆசிரியர்கள் மட்டுமே எழுதிவிட முடியாது மனிதர்களின் வாழ்கையை  தலைமுறைகளின் வல்வை இலக்கியம் மட்டுமே உண்மையாய் பிரதிபலிக்கமுடியும். பல ஆண்டுகளுக்கு முன் மார்க்வெஸின் ஒரு நூற்றாண்டு தனிமையும் மற்ற லத்தின் அமெரிக்க இலக்கியங்களையும் நான் படித்து பிரமித்திருக்கிறேன். குற்ற பரம்பரை நமக்கு ஒரு நூற்றாண்டு வல்வை நமக்கு உயிரோட்டமாய் உணர்த்துகிறது.

கதை கரு என்பது வெறுமனே வாழ்விலிருந்து மட்டும் பெறபடுவதில்லை வாழ்வியலோடு படைப்பாளியால் பரிசோதிக்கப்பட்டு வாசகனுக்கு தரப்படுகின்ற அம்சமாகும் நூறாண்டுகளுக்கு முன்பு இருந்த வாழ்வின் விசயங்களில் இருந்து கதை கருவை உருவாக்கி வாசகனுக்கு தருவது லேசுபட்ட விசயமல்ல அனுபவப்பட்ட மனிதர்களிடம் இருந்துதான் கதை கரு எடுக்க படுகிறது.

நான் ஒரு மனிதன் மனித தன்மையுள்ள எதையும் எனக்கு தொடர்பற்றதாக கருதவில்லை என்பது கார்ல் மார்க்சுக்கு  மிகவும் பிடித்தமான வாசகம். வாழ்வில் காணும் சொற்ப அழகாய் மிகை படுத்தி பேரழகாய் காட்டும் போது அழகியல் வெற்றியடைகிறது.

மேலும் இப்புத்தகத்தில் கிராமிய வாழ்வின் அழகாய் பிரதி பலிப்பதொடு வேலாவின் கலை நின்று விடுவதில்லை  அழகை உருவாக்கவும் செய்கிறார் என்பதை ஒவ்வொரு பக்கத்திலு, நம்மால் உணர முடிகிறது. அதிலும் கொடூரமும் மூர்கத்தனமும் நிறைந்த கள்ளர்கள் பற்றிய நாவலில் இதை உருவாக்குவதில் வேலாயுதம் வெற்றி பெற்றுள்ளார்.


புத்தகத்தை பற்றி 

ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்த கூட்டஞ்சோறு கதைகருவின் பலம் கருதி குற்ற பரம்பரை என மறு பெயரிடபடுகிறது 
வைரங்கலியோ சுரங்கத்திலிருந்துதான் வெட்டிதான் எடுக்க முடியும்  ஜூனியர் விகடன் ஆசிரியர் குழு வேலாவின் சுரங்கத்திலிருந்து வைரங்களை வெட்டி எடுத்து அழகு கொழிக்கும் மாலையாகி தந்துள்ளது இதற்காக ஜூ வி யை பாராட்டியே தீர வேண்டும்.

பேரன்பும் 
பெருங்கோபமும்
கொண்டவை 
என் எழுத்துகள் ...!
-வேல ராம மூர்த்தி 


நாவலை மொத்தமாய் படித்து முடிந்ததும் என்னை ஆசுவாசபடுத்தி கொள்ள வெகுநேரம் பிடித்தது குலாணி கிழவி  அன்று இரவு முழுக்க அழுகையும் ஆங்காரமும் நின்று கொண்டு என்னை தூங்கவே விடவில்லை . வேலாவை  பற்றிய சிந்தனை எனக்குள் வரும்போது அவரை உருவபடுத்த முடியாமல் திணறுவேன். குற்ற பரம்பரை நாவல் வந்தபின் வந்த பின் அடையாளம் கண்டவிட்டேன் நாவலில் வரும் வில்லாயுதம் தான் இந்த வேலா .- தோழமையுடன் எஸ்.ஏ.பெருமாள் 

வேல ராம மூர்த்திக்கு இந்த பொய் முகங்கள் தெரிகிறது அவர் தங்கள் ஜனங்களுக்காக கசிகிறார் அவர்கள் அவல  நிலை வறுத்த மடையா செய்கிறது . அவரது கோபம் அவரது எரிச்சல் ஆதரவு அணைப்பு ஆதரவு,அணைப்பு அவரது கதைகளாகி இருக்கின்றன.
வேல ராம மூர்த்தியின் முப்பது கதைகளை நான் வாசித்து இருக்கிறேன் முதல் வாசிப்பில் உண்மை கானலும் ,இரண்டாவது முறை கலை அலகுகளும்,சிக்கன வார்த்தை பிரயோகம் முதலியனவையும் புரிபடும்.இலக்கியத்தை திட்டவட்டமான கோட்பாடுகள் வடிவமைத்து கொண்டு எழுதுகிற எழுத்தாளர் வேல ராம மூர்த்தி .- நேசமுடன் பிரபஞ்சன்