book

மன்மோகன் சிங்

Manmohan Singh

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜே. ராம்கீ
பதிப்பகம் :புரோடிஜி தமிழ்
Publisher :Prodigy Tamil
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788183689427
குறிச்சொற்கள் :மன்மோகன் சிங், சரித்திரம், தலைவர்கள், பெருந்தலைவர், இந்தியா, பிரதமர்
Out of Stock
Add to Alert List

1990-களில் பெட்ரோல் இறக்குமதி செய்ய பணமில்லாமல், உலகின் எந்த நிதி நிறுவனமும் கடன் தர மறுத்தபின் ரிசர்வ் வங்கியில் இருந்த தங்கத்தை பாங்க் ஆஃப் இங்கிலாந்திடம் அடகுவைத்து கடன் பெற்றது இந்தியா. நிச்சயம் இதுவோர் அவமானகரமான சூழ்நிலைதான். இந்தியா இனி மீளவே மீளாது என்பதுபோல் தோற்றமளித்தது.

அந்தச் சமயத்தில்தான், 1991-ல் நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதி அமைச்சரானார் மன்மோகன் சிங். 1992 ஜூலையில் இந்திய வரலாற்றை மாற்றி எழுதிய பொருளாதார தாராளமயமாக்கலுடன் கூடிய அதிநவீன பட்ஜெட்டை அறிமுகப்படுத்தினார்.

இந்தியா புதிய பாதையில் நாலுகால் பாய்ச்சலில் பயணத்தைத் தொடங்கியது.
சாமான்ய மனிதர்களின் மத்தியிலிருந்து பிரதமராக விஸ்வரூபமெடுத்திருக்கும் மன்-மோகன் சிங்கின் சுவாரசிய வாழ்க்கையை விறுவிறுப்புடன் சொல்கிறது இந்நூல்.