book

பாரம்பர்ய பண்டிகைகளும் பலகாரங்களும்

Parambariya Pandigaigalum Palagarangalum

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சீதா ராஜகோபாலன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :151
பதிப்பு :1
Published on :2015
ISBN :9788184766868
Add to Cart

è£லங்காலமாக நம் முன்னோர்கள் பாரம்பர்யமாக கடைப்பிடித்து வந்த கலாசாரங்களை இக்கால தலைமுறையினரின் வாழ்வியலில் காண்பது அரிதாகி வருகிறது. அக்கலாசாரங்களில் ஒன்றுதான் பண்டிகைகள். நம் வாழ்க்கை நெறிகளில் இன்றியமையாதது, தலையாயது இறைவனை வழிபடுவதாகும். இப்படி இறைவனை வணங்க விசேஷ நாட்களை நியமிப்பதே பண்டிகைகள் ஆகும். நாள் நட்சத்திரங்களின்படி விசேஷ நாட்களின் சிறப்பையும் இப்பண்டிகைகள் உணர்த்துகிறது. பண்டிகை காலங்களின் விசேஷமே எல்லா நலன்களும் அருளி, வாழ வழி செய்யும் இறைவனை வணங்கி, அந்நாளில் பல்வேறு சுவைகளில் சமைத்து உணவுகளை பரிமாறி பூஜித்து, உறவினர்களோடு இணைந்து கொண்டாடுவதே. ஆனால், இன்றைய வேகத்தடையில்லா கால ஓட்டத்தில் பண்டிகைக் காலங்களில் பலகாரங்களை வீடுகளில் செய்யும் முறைகள் மாறி, கடைகளில் வாங்கி கொண்டாடும் பழக்கம் வழக்கமாகிக் கொண்டிருக்கிறது. இந்துக்கள் பாரம்பர்யமாகக் கொண்டாடி மகிழ்ந்த பண்டிகைகளைக் கொண்டாடும் முறைகளை இந்நூல் விளக்கிக் காட்டுகிறது. அந்நாட்களில் எவ்வகை பலகாரங்களை செய்து, எவ்விதத்தில் இறைவனுக்கு வழிபாடு செய்ய வேண்டுமென்பதை இந்நூலில் தெளிவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இன்றைய இளைய தலைமுறையினர் காய்கறிகள், பழங்கள், கீரைகள், பயறுவகைகள் ஆகிய உணவு பொருட்களைக் கொண்டு எளிய முறையில் சுவையாக பொறியல், கூட்டு, பச்சடி, மசியல் போன்ற பலவிதங்களில் சமைக்கும் முறையை அறிந்து கொள்ளலாம். பலருக்கும் பயன்படும் வகையில் பாரம்பர்யத்துடன் வெளிவரும் இந்தப் புத்தகம் எல்லோருக்கும் பிரயோஜனமாயிருக்கும் என்பதே இந்நூலின் சிறப்பாகும்.