book

குழந்தைகள் நோய்க்கு ஹோமியோ மருத்துவம்

Kuzhanthaigal Noikku Homeo Maruthuvam

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :Dr.எஸ். தொரியாரோச்
பதிப்பகம் :கிரிஜா பதிப்பகம்
Publisher :Kirija Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :272
பதிப்பு :1
Published on :2005
Out of Stock
Add to Alert List

ஒரு பிறந்த குழந்தை சராசரியாக 20 அங்குலம் நீளமும் 7.5 பவுண்டு எடையுடனும் இருக்கும். ஆனால் பெண் குழந்தை ஆண் குழந்தையைவிடச் சற்றுச் சிறியதாக இருக்கும். குறிப்பிட்ட காலத்திற்கு முன் பிறக்கும் குழந்தையைக் குறை மாதத்தில் பிறந்தது என்கிறோம். ஒரு குழந்தை பிறக்கும்போது 5.5 பவுண்டுக்குக் குறைவாக இருந்தால் அந்தக் குறை மாதத்தில் பிறந்த குழந்தை என்கிறார்கள். அதன் கர்ப்பத்தில் இருந்த காலத்தைப் பற்றிப் பொருட்படுத்துவதில்லை. இவ்வாறு குறை மாதத்தில் பிறந்த குழந்தை சில ஆண்டுகளில் சாதாரண குழந்தைகளுக்குள்ள எடையைப் பெற்றுவிடுகின்றது.  

பிறந்த உடனே குழந்தை சில செயல்களைச் செய்கிறது. அழுதல், கை கால்களை மடக்கி நீட்டுதல் ஆகியனவாகும். இச்செயல் அதன் வெப்பநிலை தொடர்ந்து இருக்கவும், மூச்சு சீராக விடவும் துணை புரிகிறது. ஒரு பிறந்த குழந்தையின் எடை அதன் 6-வது மாதத்தில் இரண்டு மடங்காகவும், ஒரு வருடத்தில் ஏறத்தாழ மூன்று மடங்காகவும் இருத்தல் நலம். ஒவ்வொரு வருடத்திற்கும் ஆறு பவுண்டு எடை கூடலாம். உயரமும் முதல் வருடத்தில் 20 அங்குல முதல் 30 அங்குலமாகவும் வளர்வது நலம். சராசரியாக உயரம் ஒரு வருடத்திற்குச் சுமார் 2 அங்குலம் வீதம் வளர்கிறது. சாதாரணமாக 10வது மாதத்திலோ 18வது மாதத்திலோ நடக்கும். 6 அல்லது 7 மாதக் குழந்தையை இரண்டு அக்குள்களிலும் பிடித்து கொண்டு நடக்க வைக்க முயற்சிக்கலாம். முதலாண்டுத் தொடக்கத்தில் வழக்கமாக ஊர்ந்து செல்லல், தவழுதல், உட்கார்ந்தவாறே நகர்ந்து செல்லல், ஒரு பக்கமாகக் கையை ஊன்றி ஊர்ந்து செல்வதைக் காணலாம்.