book

வங்கியும் நீங்களும்

Vangiyum Neengalum

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எல்.வி. வாசுதேவன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :100
பதிப்பு :1
Published on :2005
ISBN :9788177352276
Out of Stock
Add to Alert List

ஏற்றுமதிக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் தயார் செய்வது குறித்து விரிவாகக் கடந்த இதழ்களில் பார்த்தோம். ஆவணங்கள் தயார் செய்தபின் வங்கியின் நடைமுறைகளைச் செயல்படுத்த வேண்டும். 
நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 40 - பேமென்ட் முறைகளும் வங்கியின் பங்கும்!
ஏற்றுமதிக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் தயார் செய்வது குறித்து விரிவாகக் கடந்த இதழ்களில் பார்த்தோம். ஆவணங்கள் தயார் செய்தபின் வங்கியின் நடைமுறைகளைச் செயல்படுத்த வேண்டும். 
நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 40 - பேமென்ட் முறைகளும் வங்கியின் பங்கும்!

ஷிப்மென்டுக்கு முன் தயார் செய்ய வேண்டிய ஆவணங்களை கஸ்டம்ஸ் ஹவுஸ் ஏஜென்டிடம் கொடுத்த பிறகு, அவர்கள் ஷிப்மென்ட் நடைமுறைகளை முடிப்பார்கள். பின்னர் அவர்கள் பில் ஆஃப் லேடிங் மற்றும் எக்ஸ்போர்ட்டர் காப்பி ஆகிய இரண்டையும் தருவார்கள். பின்னர் ஷிப்மென்டுக்கான இன்வாய்ஸ், பேக்கிங் லிஸ்ட் உள்ளிட்ட ஆவணங்களுடன் அவர்கள் தரும் பில் ஆஃப் லேடிங், எக்ஸ்போர்ட்டர் காபி ஆகியவற்றையும், இறக்குமதியாளர் கேட்டிருக்கும் அனைத்து சான்றிதழ்களையும் வங்கியில் கொடுக்க வேண்டும். இவற்றுடன் சேர்த்து வங்கி மேலாளருக்கு பேங்க் கவரிங் லெட்டர் ஒன்றையும் எழுதித் தரவேண்டும். அதில் என்னென்ன ஒரிஜினல், என்னென்ன நகல் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன என்பதைக் குறிப்பிட வேண்டும். அவற்றைப் பெற்றுக்கொண்டு வங்கியிலிருந்து ஒரு ‘அட்வைஸ் நம்பர்’ தருவார்கள்;  அதை வாங்கிக்கொள்ளவும்.

அதன்பின் நம் வங்கியிலிருந்து இறக்குமதியாளரின் வங்கிக்கு அந்த ஆவணங்கள் அனுப்பப்படும். அந்த ஆவணங்களை இறக்குமதியாளர் பெற்றுக்கொண்டு, நீங்கள் அனுப்பிய சரக்கை அவர் துறைமுகத்திலிருந்து எடுத்துக்கொள்வார். அந்தப் பொருளுக்கானப் பணத்தை இறக்குமதியாளரின் வங்கி உங்கள் வங்கிக்கு அனுப்பும். இவை பொதுவான பரிவர்த்தனை முறை.

பேமென்ட் முறைகளில் பல வழிகள் உள்ளன. இவற்றில் எந்தப் பேமென்ட் முறையைச் செயல்படுத்தலாம் என்று இறக்குமதி யாளரிடம் கேட்டு உறுதி செய்துகொண்டு செயல்படுத்தவும். அது உங்களுக்குப் பாதுகாப்பானதாக இருக்குமா எனத் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு, பின்வரும் பேமென்ட் முறைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்.