book

தில்லை என்னும் திருத்தலம்

Thillai Ennum Thiruthalam

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர். சந்திரிகா சுப்ரமண்யன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :180
பதிப்பு :1
Published on :2015
ISBN :9788184027792
Add to Cart

இப்பூவுலகில் புனித பூமி , பூலோக சொர்க்கபூலோக கைலாயம் என்று போற்றப்படும் தமிழ்நாட்டில், உலக புருஷனின் இதயக் கமலமாய்த் திகழ்வது சிதம்பரம் என்னும் தலமாகும். இத்தலம் கடலூர் மாவட்டத்தில், கொள்ளிடம் என்னும் நதிக்கு வடக்கிலும், மணிமுக்தா நதிக்கு தெற்கிலும், வங்கக்கடலுக்கு மேற்கில் 5 கல் தொலைவிலும் அமைந்துள்ளது. சென்னைக்கும் திருச்சிராப்பள்ளிக்கும் நடுவில் மெயின் லைன் இருப்புப்பாதையில் அமைந்த்துள்ளது. இவ்வூரின் நடுநாயகமாக, தில்லை நடராஜர் கோவில் அமைந்துள்ளது. ஆதி காலத்தில் இவ்விடம் தில்லை என்னும் மரங்கள் அடர்ந்த காடாக விளங்கியதால், தில்லைவனம் என்றும், புலிக்கால் முனிவர் என்பவர் பெரும்பற்றினால் இத்தலத்தில் பூசித்தமையால்,பெரும்பற்றப்புலியூர் என்றும், இறைவன் அம்பலத்தில் ஆடல் புரிதலால் சிற்றம்பலம் என்றும், அதுவே சிதம்பரம் என்று ஆயிற்று என்பர். சித்+அம்பரம் என்பதே சிதம்பரம் ஆயிற்று என்பர். பொன்னம்பலம் என்ற பெயரும் உண்டு.