book

உள்முகமாய் ஒரு பயணம்

Ulmugamaai Oru Payanam

₹350+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஓஷோ
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :344
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788184027525
Add to Cart

  உடலிலுள்ள ஆதார மையங்களை மேம்பட வைத்து, அவற்றின்மீது செல்வாக்குச் செலுத்த நினைப்பவர் செய்ய வேண்டிய முதல் வேலை, சீரான சுவாசத்தினை நிலை நிறுத்துவதாகும். புத்தியில் படிந்துள்ள சிந்தனைகளை சுவாசம் மிகவும் ஆழமாயும் , அதீகமாகவும் தாக்குகின்றது. எத்தனைக்கெத்தனை உங்களுடைய சுவாச ஓட்டம் மெதுவாகவும் ஆழமாகவும் அமைகிறதோ, அந்த அளவுக்கு உங்களது நாபி மையம் அதிகமாய் விருத்தியாகும்.

ஆங்கிலத்தில் ‘ஓம்என எழுதினால் மூன்று அட்சரங்கள் வரும்.

A, U, M, என்பவை அவை. நீங்கள் வாயை மூடிக் கொள்ளுங்கள். ‘ஆஎன உரக்க வாய்க்குள்ளேயே சொல்லுங்கள், அப்போது ‘ A ‘  என்பதன் ஒலி உங்கள் மண்டைக்குள் எதிரொலிப்பதை நீங்கள் உணர்வீர்கள். ‘ A ‘  என்பது கபால மையத்தின் ஒரு குறியீடு. இதைப்போலவே மூடிய வாய்க்குள் U  என்று சொல்லுங்கள். அப்போது  U  என்பதன் ஓசை உங்களது நெஞ்சுக்குள் எதிரொலிப்பதை நீங்கள் உணர்வீர்கள்.  U  என்பது நெஞ்சகத்தின் ஒரு குறியீடு. பிற்கு கடைசியாய் ‘ஓம்என்பதன் மூன்றாவது ஆங்கில அட்சரமான M என்பதனை நீங்கள் உங்களுடைய வாயைமூடிக்கொண்டு உள்ளேயே சொன்னால், அது உங்கள் நாபிக்குள் எதிரொலிப்பதை நீங்கள் அனுபவிப்பீர்கள். இங்கு, M என்பது நாபியின் குறியீடாகின்றது. A,U,M  ஆகிய மூன்றும் மூன்று ஒலிகள். முறையே கபாலமான தலை, இதயம் மற்றும் தொப்புள் ஆடியவற்றைக் குறிக்கும் ஒலிகள்.