book

காட்டினிலே வரும் கீதம்

Kattinilae Varum Geetham

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரபு சங்கர்
பதிப்பகம் :வரம் வெளியீடு
Publisher :Varam Veliyeedu
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788183681872
குறிச்சொற்கள் :கீதம், பொக்கிஷம், புராணம், பழங்கதைகள், சரித்திரம், கோயில்  பிரசாதம்
Out of Stock
Add to Alert List

இந்துக்களின் வாழ்வில் காசி, ராமேஸ்வரம் போல் பிடித்திவிட்ட புண்ணிய பூமி சபரிமலை. புனிதமான 18 படிகள் . இடைவிடாத
சரண கோஷம். சுற்றிலும் அடர்ந்த காடுகள், வானளாவிய மரங்கள். புலிகளும் யானைகளும் நீர் அருந்தும் பம்பா பிரதேசம். சிரித்த முகத்துடன் யோக பீடத்தில் காட்சி தரும் ஐயப்பன். பகல் பொழுதெல்லாம் நெய்யபிஷேகத்தில் திளைக்கிறார். மாலையில் மகாராஜாவாக திருவாபரணம் பூட்டிக்கொள்கிறார்.

அடர்ந்த காட்டில் அமர்ந்துகொண்டு நாட்டையே அல்லவா அங்கு நகர்த்திக்கொண்டு போகிறார். சபரிமலைக்குப் போக விரதமிருக்கும் முறைகள், தர்ம சாஸ்தாவின் வாழ்க்கை  சரிதம், பஜனைகளின் போது பாடப்படும் சுவையான பாடல்கள், எல்லாம் கொண்ட 'கோயில்  பிரசாதம்' என்றே இந்நூலைக் குறிப்பிடலாம். நூலாசிரியர் பிரபுசங்கர்  குமுதம் பக்தி இதழில்  பல ஆண்டு  காலம் பணியாற்றியவர்.

                                                                                                                                                - பிரபு  சங்கர்.