book

அராஜகம் 1000

Araajakam - 1000

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அராத்து
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789381975558
Out of Stock
Add to Alert List

ட்விட்டர் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லையென்று மட்டும் சொல்லி விடாதீர்கள். உங்களுக்கு தெரியும். ஆனால் இதுதான் ட்விட்டர் என்று வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். 140 எழுத்துகளுக்குள் சொல்ல வந்ததை புரியவைத்துவிடும் ஒரு சாமர்த்தியம் நிறைந்த கலை அது. அப்படிப் பார்த்தல் இதன் முன்னோடி நம்ம ‘குறள்’தான். சொல்ல வந்த மாபெரும் கருத்தை ட்விட்டரிலும் பாதியாக, ஏழே வார்த்தைகளுக்குள், கிட்டத்தட்ட 70’ஏ எழுத்துகளுக்குள் சொல்லியவர் வள்ளுவர். ஒரு பத்து வருடத்துக்கு முன்பு, குறளை விடக் குட்டியாக ஜப்பானின் ஹைக்கூ கிளம்பியது. சுஜாதா கூட அதைப் பற்றி நிறைய சொல்லி நமக்கு புரியவைத்துப் பார்த்தார். ஆனால் நாம் ஹைக்கூ’வை மிக அசால்ட்டாக புரிந்து கொண்டு அதை ஒரு வழியாக்கிவிட்டோம். பல தமிழ் ஹைக்கூ’கள் ஹையகோ டைப்பாகவே இருந்தன. நல்ல வேளையாக நமது ஆர்வம் அத்தோடு மட்டுப் பட்டுவிட்டது. அதையும் தாண்டி, ஒரு அழகிய தமிழ் மகன் மிக மிக குட்டியாக மூன்று எழுத்தில் கவிதையே சொன்னார். இவையெல்லாம் நிலைக்கவில்லை. ட்விட்டர் மட்டும் சற்று வேரூன்றி நின்று விட்டது.clique aqui