book

கடவுளைத் தேடி

Kadavulai Thedi

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கிருஷ்ணா. கே.ஆர்.எஸ்.
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :128
பதிப்பு :2
Published on :2008
ISBN :9788184760705
குறிச்சொற்கள் :தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
Out of Stock
Add to Alert List

கல்லும் மண்ணும் மனித குலமும் தானாகவே தோன்றிவிட்டனவா; இவை எங்கிருந்து வந்தன; யார் உருவாக்கினார்கள்; எப்படி உருவாக்கினார்கள்; எப்போது உருவாக்கினார்கள்; அப்படி உருவாக்கிய சக்தி எது _ இவற்றை எல்லாம் நாம் தினமும் அலசிக் கொண்டுதான் வருகிறோம். ஆனால், இன்று வரை நாம் ஏற்றுக் கொள்ளக்கூடிய அல்லது நம்பத் தகுந்த பதில்கள் கிடைக்கவில்லை என்ற குறை, ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது. இந்த சக்தியைத் தேடிக் கொண்டிருத்தல் என்பது ஒருபுறம் இருக்க, இந்தக் கருத்தோட்டமே தவறு என்று சொல்லும் சிலரும் இருக்கிறார்கள். இவர்கள் முன்வைக்கும் கருத்துகளுடன் விஞ்ஞானக் கூற்றையும், வேத விளக்கங்களையும் ஒப்பிட்டு, இறைவனின் இயல்பை எளிதாகப் புரிந்துகொள்ள உதவும் வகையில் இந்த நூலைத் தொகுத்துள்ளார் நூலாசிரியர் கிருஷ்ணா கே.ஆர்.எஸ். இறைவனைத் தேடித் தேடி ஓடிக் கொண்டிருப்பதைவிட, உண்மைப் பொருளாக இறைவன் நமக்குள்ளே இருப்பதைப் புரிய வைக்க முயன்றுள்ளார் இந்நூலாசிரியர். ஒருவன் தன் சுக&துக்கங்களையும், நிறை&குறைகளையும் நிவர்த்தி செய்துகொள்ள ஒரு வழிகாட்டியாக, துன்பத்தில் துவளும் வேளையில் ஆறுதல் தரும் துணையாக இருந்து நம்மைக் காத்துவரும் சக்தியை, புரிந்து, உணர்ந்து தெளிவு பெற இந்நூல் கைகொடுக்கும். பகவத்கீதையில் கண்ணன் காட்டிய பல்வேறு உபாயங்களை எளிமையான தமிழில் விளக்கி, தகுந்த மனப்பக்குவம் வந்துவிட்டால் எல்லோருமே கடவுளை உணர்ந்துகொள்ளலாம் என்ற கருத்தை படிப்பவர் மனத்தில் பதியச் செய்துள்ளார். இந்த நூல் ஆன்மிகத் தேடலில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவருக்கும் சிறந்த வழிகாட்டியாக விளங்கும்.