book

அருந்ததியர்: வாழும் வரலாறு

Arunthathiyar: Vazhum Varalaru

₹350+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மாற்கு
பதிப்பகம் :தமிழினி
Publisher :Tamizhini Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :342
பதிப்பு :2
Published on :2012
Out of Stock
Add to Alert List

விஸ்வநாத நாயக்கர் (1529-1564 ஆட்சியாண்டு) காலகட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் தெலுங்கர்கள் மதுரைப் பகுதியில் வந்து குடியேறினர். இவர்களுடன் அருந்ததியர்களும் வந்திருக்கலாம். இடப்பெயர்ச்சிக்கு மற்றொரு காரணமும் உண்டு. அதாவது கம்பளத்தார்களிடம் முகமதியர்கள் பெண் கேட்டனர். முகமதியர்களுக்குப் பெண் கொடுக்க கம்பளத்தார்களுக்கு விருப்பமில்லை. அதே சமயத்தில் பெண் கொடுக்க மாட்டோம் என்று துணிந்து கூறி அவர்களை எதிர்க்கவும் முடியவி்ல்லை. இத்தகை சூழ்நிலையில் முகமதியர்களுக்குப் பெண் கொடுக்காமல் இரவோடு இரவாகப் புறப்பட்டுத் தமிழகம் வந்தனர். அப்படி வந்தவர்களில் அருந்ததியர்களும் உண்டு என்ற சரித்திரக் குறிப்பும் கிடைக்கிறது. ஹைதர் அலி, திப்பு சுல்தான் போன்றோர் தமிழகத்தின் மீது படையெடுத்தனர். அப்படி வந்தபோது தம்முடன் படைவீரர்களாகவும், குதிரைக்கு வேண்டிய தோல் பொருள்கள், படைவீரர்களுக்கு வேண்டிய தோலாடைகள் செய்யவும் கன்னடம் பேசும் அருந்ததியர் அழைத்து வரப்பட்டனர். தமிழக வேளிர் பிரிவினருள் அதியர் என்ற பிரிவினரும் உண்டு. இவர்கள் தகடூர் பகுதியை (இன்றைய தருமபுரி) ஆட்சி செய்தனர். இப்பகுதி வடுக நாடு என்றழைக்கப்பட்டது. இந்த அதியர் வழியில் வந்தவர்கள்தான் அருந்ததியர். அதியர் என்ற பெயர்தான் மருவி அருந்ததியர் என்ற பெயரானது. அதியர் குலத்து சிறந்த மன்னனை மா+அதியர் = மாதியர் என்றழைத்தனர். மாதியர் என்பது அருந்ததியருக்கு கொடுக்கப்பட்ட மற்றொரு பெயராகும்.