book

ஆஸ்துமா நோய் நீங்க சித்த வைத்தியம்

Aasthumaa Noi Neenga Siddha Vaiththiyam

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :Dr S.N. முரளிதர்
பதிப்பகம் :மோகன் புத்தக நிலையம்
Publisher :Mohan Puthaga Nilayam
புத்தக வகை :இயற்கை மருத்துவம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2014
Add to Cart

ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆடாதோடை இலைகளை எடுத்து அதில்உள்ள காம்பு, இலை நரம்புகளை சுத்தமாக நீக்கி சிறிதாக நறுக்கி தேன்விட்டுமென்... · ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆடாதோடை இலைகளை எடுத்து அதில்உள்ள காம்பு, இலை நரம்புகளை சுத்தமாக நீக்கி சிறிதாக நறுக்கி தேன்விட்டுமென்மையாக வதக்கி, 2 குவளை தண்ணீரில் 10 கிராம் அளவு இலைகளைப் போட்டுநன்றாக காய்ச்சி 1/2 குவளையாக வந்தபின் அருந்தவேண்டும். இவ்வாறு தினமும்இருவேளை தொடர்ந்து அருந்தி வந்தால் ஆஸ்துமாவின் பாதிப்பு குறையும். · தூதுவளை , இம்பூரல், ஆடாதோடை, சங்கன் வேர், சுக்கு, திப்பிலி,பற்படகம், கண்டக்காலி, வழுதுனை வேர், வீலி இவைகளை சம அளவு எடுத்து நான்குபங்கு நீர்விட்டு எட்டில் 1 பங்காக நன்கு காய்ச்சி தேன் கலந்துஉட்கொண்டால் இரைப்பு, இருமல் நோய்கள் நீங்கும். · ஆடாதோடை இலைச் சாற்றில் தாளிச பத்திரி இலைத்தூளை தேன் கலந்து சாப்பிட்டால் இரைப்பு, இருமல் நீங்கும். · நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் ஆடாதோடை வேர்ப்பட்டை, கோஷ்டம்,சிற்றரத்தை, வசம்பு, மிளகு இவற்றை வாங்கி சம அளவு எடுத்து முறைப்படிசுத்தம் செய்து சூரணமாக்கி, 15 கிராம் அளவு சூரணத்திற்கு 400 மில்லிகிராம் தண்ணீர் விட்டு 100 மில்லியாக வற்ற வைத்து தினமும் மூன்று வேளைக்குபங்கிட்டு அருந்தி வந்தால் ஆஸ்துமா நோய் ஆச்சர்யம் படும் வகையில்குணமாகும். · திப்பிலி லேகியம் திப்பிலி 70 கிராம் எடுத்து அதனுடன் சீரகம், சுக்கு, ஏலம், திப்பிலிவேர்,வாய்விடங்கம், கடுக்காய், மிளகு இவற்றை வகைக்கு 8 1/2 கிராம் அளவு எடுத்துஇளம் வறுப்பாக வறுத்து, பொடியாக்கி, தேன், சர்க்கரை சேர்த்து காய்ச்சிபாகு பதத்தில் இறக்கி நன்றாக கடைந்து 1 ஸ்பூன் அளவு தினமும் இருவேளை என 48நாட்கள் சாப்பிட்டு வந்தால் இரைப்பு, இருமல் ஈளை நீங்கும். ஆஸ்துமா நோய்க்கு அடிப்படைக் காரணங்கள் ஒவ்வாமை (Allergy)பாரம்பரியம், ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டவர்கள் செய்யவேண்டிய ஆசனங்கள் மச்சாசனம், புயங்காசனம், பிராணயாமம்.