book

யார் இந்த தேவதை

Yaar Indha Devadhai

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். மணிமாலா
பதிப்பகம் :சசி நிலையம்
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :272
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

''சரி," என்று சைகையிலே கையமர்த்திவிட்டு மகளிடம் பேசினார். "நான் நல்லா இருக்கேன்ப்பா." 'உன் சித்தி, சித்தப்பா?" "எல்லோரும் நல்லா இருக்காங்க. நீங்க எப்படி இருக்கீங்க? அம்மாவும் பிருந்தாவும் எப்படி இருக்காங்க?" "எங்களுக்கென்னம்மா... நாங்க நல்லாதான் இருக்கோம்! பிருந்தாவை நினைச்சாதான் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, பிரியா..." "விசயம் கேள்விப்பட்டதிலேருந்து எனக்கும் சரியா தூக்கமே வர்றதில்லே. ஆனா, இந்தக் காலத்திலே, அதுவும் மருத்துவ சாதனைகள் விண்ணைத் தொடுகிற அளவுக்கு வளர்ந்திருக்கும்போது... பிருந்தாவை முழுக்க குணப் படுத்துறது பெரிய விசயமேயில்லே. இங்கே கனடாவிலே ஏகப்பட்ட மருத்துவ வசதிகள். டாக்டர்கள் இருக்கிறாங்க. பேசாம பிருந்தாவை இங்கே அனுப்புங்களேன்ப்பா. சீக்கிரமா குணப்படுத்திவிடலாம்."