book

BPO : ஓர் அறிமுகம்

BPO: Orr Arimugam

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.எல்.வி. மூர்த்தி
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :உழைப்பு
பக்கங்கள் :185
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788183688451
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Add to Cart

மினுமினுப்பும் பளபளப்புமாக ஜொலித்துக்கொண்டு இருக்கிறது பி.பி.ஓ. துறை. டாக்டர், என்ஜினியர், கலெக்டர் வரிசையில் இன்று அதிகம் பேரை ஈர்த்துக்கொண்டிருக்கும் துறையும் இதுவே.

நினைத்து பார்த்திருப்போமா? எடுத்த எடுப்பில் எகிற வைக்கும் சம்பளம். அறுசுவை உணவு. அருந்த வேளாவேளைக்குப் பழச்சாறு. ஒன்ஸ்மோர் போகலாமா நண்பா என்று கேட்டு கையைப் பிடித்து இழுத்து ஊர் சுற்றிக் காட்டுகிறார்கள். அத்தனை கரிசனம். அத்தனை கனிவு.

எல்லாம் சரிதான். ஆனால் இதற்கு நாம் கொடுக்கும் விலை கொஞ்சம் கூடுதலோ? அமெரிக்கா விழித்திருக்கவேண்டும் என்னும் ஒரே காரணத்துக்காக நாம் நம் உறக்கத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோமா? அறுசுவை உணவுதான் என்றாலும் அகால நேரங்களில் அளிக்கப்படும்போது அதை உடல் ஏற்றுக்கொள்ளுமா?

நிஜத்தில் இது எப்படிப்பட்ட துறை? பளபளப்பையும் மினுமினுப்பையும் தாண்டி இதில் என்ன இருக்கிறது? பெண்கள் அதிக அளவில் இத்துறையில் காலடி எடுத்து வைத்திருப்பது ஏன்? பி.பி.ஓ. வரமா சாபமா? பி.பி.ஓ. என்னும் துறையின் ஆன்மாவை உள்ளது உள்ளபடி பதிவு செய்திருக்கிறது இந்நூல்.