book

என் பெயர் எஸ்கோபர்

En Peyar Escobar

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. ராகவன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183685795
குறிச்சொற்கள் :சரித்திரம், வழக்கு, நிஜம்
Out of Stock
Add to Alert List

போதைக் கடத்தல்காரர்களின் தலைமையகம் கொலம்பியா: குலதெய்வம் பாப்லோ எஸ்கோபர்.

சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்தி சரக்குகளை வாங்கி விற்கும் சாதாரண கடத்தல்காரன் இல்லை இவன். வேண்டிய இடத்தில், வேண்டிய நேரத்தில் மிக அநாயசமாகத் துளைகளைப் போட்டுக்கொண்டு முன்னேறிய இரும்பு எலி. நம்பமுடியாத அளவுக்கு மாபெரும் சாம்ராஜ்ஜியம் ஒன்றை உருவாக்கி வாழ்ந்தவன்.

ஓர் அரசாங்கத்திடம் இருப்பதைக் காட்டிலும் அதிகமான பணம். அசைக்க முடியாத செல்வாக்கு. மேலாக, அசாதாரணமான காரியங்களைச் கச்சிதமாகச் சாதித்துமுடிக்கும் செய்நேர்த்தி. அமெரிக்காவின் கண்ணிலேயே விரலைவிட்டு ஆட்டியெடுத்தவன். உலகம் முழுதும் இன்று பரவியிருக்கும் போதை நெட் ஒர்க் என்பது எஸ்கோபர் போட்டுக்கொடுத்த வரைபடங்களின் அடிப்படையில் உருவானதுதான். போதை விற்ற காசைக் கொண்டு பல புரட்சி இயக்கங்களுக்கும் உதவிய விசித்திரப் பிறவி. மிகப்பெரிய கிரிமினல் என்று கொலம்பிய அரசும் பல தேச அரசாங்கங்களும் கூவிக் கதறியபிறகும் கொலம்பிய மக்கள் மட்டும் ஏன் எஸ்கோபரை ஒரு நடமாடும் தெய்வமாகப் பார்த்தார்கள்?

கிள்ளிக்கொடுக்கவும் மனம் வராத அரசியல்வாதிகளுக்கு மத்தியில் அவன் அள்ளிக்கொடுத்ததாலா? கொலம்பிய போலீசாரிடம் அவன் சிக்கிக்கொள்ள இருந்த சமயம் ஒரு நகரமே அவனைச் சுற்றி அரண் போலிருந்து அடைகாத்ததெல்லாம் சரித்திரத்தில் வேறெப்போதும், எங்கேயும் நடந்திராதவை. சர்வதேச போதைக் கடத்தல் நெட்ஒர்க் குறித்த முழுமையான புரிதல் இந்த நூலின்மூலம் சாத்தியமாகும்.