book

கொங்குநாட்டு வரலாறும் அண்ணன்மார் வழிபாடும்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேரா.ப. கிருஷ்ணசாமி
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

கொங்கு நாடு என்பது சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு காவிரியின் கரையினை ஒட்டிய கரூர் – திருச்சி சாலையில் அமைந்துள்ள அமராவாதி ஆற்றினை உள்ளடக்கிய நாடாகும். இந்த கட்டுரையில் நாம் சொல்லும் மாந்தர்களின் தாய் மற்றும் தந்தையின் சபதத்திலிருந்து தொடங்கி தங்கையின் அழுகை வாயிலாக முடிகிறது.
அத்தை மகனை மசையன் என தெரிந்தும் கணவனாக ஏற்றுக்கொண்ட நாச்சியாரின் குழந்தைகளே பொன்னரும் சங்கரும். இந்த கதை நடந்த இடமாக கருதப்படும் வீரப்பூரில் வருடம் தோரும் மாசி மாதம் நடைபெறும் திருவிழா காண கண்கோடி வேண்டும். 7 நாட்கள் நடக்கும் இவ்விழாவிற்கு வரும் அனேகரும் அந்த 7 நாட்களும் அங்கேயே தங்கி இருப்பர் எனப்து குறிப்பிடத்தக்கது. இலட்சக்கணக்கில் கூடும் கூட்டம் என அந்த இடமே திமிலோகப்படும். (இன்றும் கொங்கு வேளாளர் வீட்டில் பெண்குழந்தைகளை ’தங்கம்’ என்றே அழைப்பதை நான் பார்த்திருக்கிறேன் முக்கியமான கதைப்பாடல் ‘குன்னடையான் கதை’ என்றும் ‘அண்ணன்மார் கதை’ என்றும் அழைக்கப்படும் கதைப்பாடலாகும். இக்கதையின் பல்வேறு கூறுகள் நாட்டார் வழக்காறுகளில் இடம்பெற்றுள்ளன. கொங்கு வேளாளர் தலைவர் களாக விளங்கிய பொன்னர், சங்கர் என்னும் இரு சகோதரர்களின் வரலாற்றைக் கூறும் வீரப்பாடல் இது. இவர்களுக்கு அருக்காணித் தங்கம் என்னும் தங்கை ஒருத்தி, கதையின் முக்கிய பகுதி இந்தத் தங்கையின் நோக்கிலிருந்தே நகர்கின்றது. கதையின் இறுதிக் கட்டமான படுகளம் அருக்காணித் தங்கத்தை மையமாகக் கொண்டது. கதைத் தலைவர்களாகிய பொன்னர், சங்கர் இருவரும் அண்ணன்மார் என்று அழைக்கப்படுவதும் தங்கையின் நோக்கில் இருந்துதான். தன் அண்ணன்களைப் பெரியண்ணன், சின்னண்ணன் என்று அருக்காணித் தங்கம் அழைக் கிறாள். இக்கதையை மக்கள் வழக்கில் ‘சின்ன அண்ணன் பெரியண்ணன் கதை’ என்று குறிப்பிடு கின்றனர். அதுவே ‘அண்ணன்மார் சாமி’யாகி யுள்ளது. பொன்னர்-சங்கர் திருச்சிக்கும் கரூருக்கும் இடையிலான பொன்னிவளட்டை ஆண்டனர். கொங்கு வேளாளர் சமுதாயம் அண்ணன்மாரின் பெயரைக் குழந்தைகளுக்கு வைக்கும் வழக்கம் பெரும்பான்மையாக உள்ளது. பொன்னர், சங்கர் ஆகிய அவர்களது இயற்பெயர் அவ்வளவாக வழங்கப் பெறுவதில்லை. பெரியசாமி, சின்னசாமி, பொன்னையன், சின்னையன் ஆகியவை இப் பகுதியில் மிகுதியாகச் சூட்டப்படுகின்றன. பெரிய அண்ணன் என்னும் பெயரும் வழங்குகின்றது. இவை பொன்னர், சங்கர் ஆகிய இருவரையும் குறிக்கும் பெயர்களே ஆகும். இரட்டைக் குழந் தைகள் ஆண்களாகப் பிறக்கும் என்றால் இந்தப் பெயர்களை அக்குழந்தைகளுக்குச் சூட்டுவது பெருவழக்கு. அருக்காணி, தங்கம், தங்கம்மாள் ஆகிய பெயர்கள் பெண்களுக்குச் சூட்டப்படுகின்றன. இக்கதையில் வரும் பிற பாத்திரங்கள் பெயர் களாகிய ராக்கியண்ணன், முத்தாயி, பவளாயி, பாவாயி முதலிய பெயர்களையும் மக்கட் பெயர் களில் காணலாம்.