book

சிலுக்கு: ஒரு பெண்ணின் கதை

Silukku: Oru Pennin Kadhai

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. தினாதாயகன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183683333
குறிச்சொற்கள் :திரைப்படம், நடிகை, பெண்ணியம்
Out of Stock
Add to Alert List

அவர் கடித்துப் போட்ட ஆப்பிள் ஆயிரக்கணக்கில் ஏலம் போயிற்று. அவர் நடித்துக் கொடுத்த படங்கள் நூறு நாள் இலக்கை அநாயாசமாகத் தாண்டின. தமிழ் சினிமாவில் வந்து போன கவர்ச்சி நடிகைகளுள் நன்று ஆடி ஜெயித்தவர் சிலுக்கு ஸ்மிதா. அவரது வாழ்விலும் மரணத்திலும் நிறையவே உண்டு மர்ம முடிச்சுகள். ஆராய்ந்து பார்த்தால் வியப்பின் உச்சிக்கே செல்கிறோம்.

ஒரு காலகட்டத்தில் சிலுக்கு நடிக்காத படத்தை வாங்கவே மறுத்தார்கள் வினியோகஸ்தர்கள்.முன்னணிக் கதாநாயகிகளை விட அவருக்குக்கூடுதல் ரசிகர்கள் இருந்தனர். முழுப் படத்துக்கு ஒரு கதாநாயகி வாங்கிய சம்பளத்தைவிட ஒரே பாடலுக்கு சிலுக்கு பெற்ற சம்பளம் அதிகம்.

திரையுலகில் சிலுக்குக்கு நண்பர்களாக இருந்தவர்கள் குறைவு. சிலுக்கு தன் பாதுகாப்புக்குப் போட்டுக்கொண்ட இரும்புத் திரை அது என்பார்கள். ஆனால் நெருங்கியவர்களுக்கு அவர் ஒரு தேவதையாகத்தான் இறுதிவரை இருந்திருக்கிறார்.

ஏழைமை; கடும் உழைப்பு; திடீர் வாய்ப்பு;பெரும் புகழ்; பணம்; அந்தஸ்து; ஆகவே காதல்;பின்னர் கசப்பு; மன முறிவு; தற்கொலை&பல நடிகைகளின் வாழ்க்கை இந்தத் திரைக்கதையில் அமைந்திருக்கலாம். ஆனால் சிலுக்கின் மரணம் உலுக்கியது போல இன்னொன்றில்லை. ஏன்?

நடிகையாக அல்ல; சிலுக்கை ஒரு பெண்ணாக அணுகி அவரது வாழ்வை ஆராயும் நூல் இது!

The apple bitten and discarded by her could be auctioned for thousands of rupees. The movies in which she acted reached and went beyond the goal of 100 days easily. Silk Smitha was one of the glamorous actresses of Tamil Cinema who won by her dances. There are many mysterious knots in her life as well as her death. When we look closely into it we are taken aback. There was a period when distributors refused to buy any movie in which Silk did not act. She had more fans than the heroines at the forefront. The amount that Silk got for a song was somtimes more than what the heroine got for the whole film. Silk Smita had very few friends in the cine field. People said that it was her safety screen of iron. But to those who knew her she was an angel. Poverty, hard work, sudden chance, great fame, money, prestige and so love and then bitterness, disappoinment and the resultant suicide. The life of many an actress would have followed this script. But never a death had shocked the society more than that of Silk Smita. Why? This book inquires into her life, not as one of an actress but as that of a woman!