book

கடைசிக் கோடு

Kadaisi Kodu

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமணன்
பதிப்பகம் :சபரீஷ் பாரதி
Publisher :Sabarish Bharathi
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788183453394
Add to Cart

எவரெஸ்ட் சிகரத்திற்கு ஏன் அந்த பெயர் வந்தது? இமயமலையின் மற்ற சிகரங்கள் எல்லாம் கைலாஷ், நங்கபர்வதம், நீல்கண்ட் என இந்து புராணங்களுக்கு சாட்சி சொல்லும் பெயர்களாலோ அல்லது கிஞ்சன்ஜங்கா போன்று அந்த பிரதேசத்தின் பெயராலேயே அழைக்கப்படும் போது, உலகிலேயே உயரமான சிகரமான எவரெஸ்ட்டுக்கு மட்டும் ஏன் அந்த பெயர்? இந்தியத் துணைகண்டத்தின் முதல் மேப்பை சரியான அளவுகளுடன் தயாரிக்க 1802இல் கர்னல் வில்லியம் லாம்ட்ன் என்ற சர்வேயர் சென்னை மெரீனா கடற்கரையில் முதல் கோடிட்டு மேற்கொண்ட ஒரு மிக சவாலான 40 ஆண்டு பயணத்தின் இறுதியில் நிகழ்ந்த ஆச்சரியம் தான் "எவரெஸ்ட்". உலக புவியியல் வரலாற்றில் சர்வேக்களுக்காக மேற்கொண்ட பயணங்களில், பணியில் பலியானவர்களின் எண்ணிக்கை அந்த காலகட்டத்தில் நடந்த எந்த ஒரு போரை விடவும் அதிகம். கர்னல் லாம்ட்ன் எழுதி குவித்திருக்கும் பயணக்குறிப்புகளும், அன்றைய ஆங்கிலேய நிர்வாகம் பதிவு செய்திருக்கும் குறிப்புகளும் இன்றும் கொல்கத்தா மற்றும் டேராடூன் புவியியல் சர்வே அலுவலக அலமாரிகளில் தூங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் சிலவற்றின் அடிப்படையிலும், சில ஆராய்ச்சியாளர்களின் கட்டுரைகளின் அடிப்படையிலும் இந்திய வரைபடம் உருவாகியிருப்பதை இந்த 'கடைசிக் கோடு' உண்மை கதை சொல்லுகிறது. ஒரு தேசம் உருவானதைச் சொல்லுவது சரித்திரம். அந்த தேசத்தின் வரைபடம் நமக்குச் சொல்வது பூகோளம். இந்த கடைசிக் கோடு ஒரு இந்திய பூகோளப் படம் எழுந்த சரித்திரத்தை சொல்லுகிறது.