book

தேவ வசிய முத்திரைகள்

Deva Vasiya Muthiraigal

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் ஜாண் பி. நாயகம்
பதிப்பகம் :சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789382820000
Add to Cart

நமது ஐந்து விரல்களிலும் பஞ்சபூதங்களின் சக்தி அடங்கியுள்ளது. குறிப்பிட்ட விரல்களை இணைக்கும் போதோ நீட்டும்போதோ அவற்றுக்குரிய சக்திகள் வெளிப்படுகின்றன. இவ்வாறு செய்வதை முத்திரைகள் என்கிறோம். இது தியானத்துடன் சேரும்போது மேலும் சக்திமிக்கதாகிறது.
கல்வி மேன்மை, பொருளாதார உயர்வு, காரியங்களில் வெற்றி, நோய் நீக்கம் போன்ற மனித வாழ்வின் உயர்தேவைகளான அனைத்தையுமே இந்த முத்திரை விஞ்ஞானத்தால் அடைந்துவிடலாம். அதற்கும் மேற்பட்ட இறையருளுக்கும் இந்த முத்திரைகளே பெருந்துணையாக உள்ளன. நமது முன்னோர்களான சித்தர்களின் மெய்ஞ்ஞானத் தேடலில் வெளிப்பட்ட அற்புத ரகசியங்கள் இவை. உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றுக்காக தினமும் நாம் பாடுபட்டு உழைக்கிறோம். இந்தத் தேடலில் பல்வேறு இன்னல்களை சந்திக்கிறோம். ஆனால் மனிதப் பிறவியின் குறிக்கோள் இதோடு நின்று விடுவதல்ல. மகிழ்வான வாழ்வென்பது முதல் குறிக்கோள். இறையருள் பெறுவதே இறுதிக் குறிக்கோள். அதை அடைவதற்கான முத்திரைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. பொக்கிஷம் போன்ற இந்நூலை சிறப்புடன் எழுதியிருக்கிறார் டாக்டர் ஜாண் பி. நாயகம். அனைவரும் நலம்பெற வேண்டுகிறோம்.