book

ஆல்ஃபா

Alpha

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டி.டி. ராமகிருஷ்ணன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :136
பதிப்பு :2
Published on :2005
ISBN :9788183680899
குறிச்சொற்கள் :அனுபவங்கள், சரித்திரம், சிந்தனைக்கதைகள், தகவல்கள்
Add to Cart

    'ஆல்ஃபா' ஒரு சம்பிரதாயமான நாவல் அல்ல. அது வாழ்க்கை அனுபவங்களை விவரிக்கவில்லை. மாறாக அனுபவத்தைத் தேடித் சென்ற வாழ்க்கையை விவரிக்கிறது. ஓர் ஆய்வுப் பொருளை விளக்குவது போல மனித நாகரிகத்தின் தொடக்கக் காலத்துக்கு வாசகனை அழைத்துச் சென்று கடந்து வந்த பாதையைப் பற்றியும் உருவாக்கிய கருத்துருவங்கள் பற்றியும் ஆராய்கிறது. இன்றுவரை நாம் அறிந்து வைத்திருக்கும் நாகரிகம், மொழி, கலாசார வளர்ச்சி யாவும் மனித இருப்புக்கு எந்த அளவு துணை போகிறது, எந்த அளவு தடையை உருவாக்கியிருக்கிறது என்பதை ஆராய்கிறது. இந்த வகையில் அரிஸ்டாட்டில், பிளேட்டோ போன்றோரின் தர்க்கவாதம் போல நீண்ட விவாதத் தன்மை வாய்ந்ததாக உள்ளது. ஒரு வகையில் இதை ஒரு விஞ்ஞான புனைகதை என்று வகைப்படுத்த முடியும் இன்னொரு வகையில் இது தீவில் மாட்டிக் கொண்டு தப்பிக்கும் கிரேக்க காவியமான இலியத்தை, ஷேக்ஸ்பியரின் டெம்பெஸ்டை நினைவுபடுத்துகிறது.