book

திக்கெட்டும் திருமுருகன்

Thikettum thirumugam

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பத்மன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788189936778
குறிச்சொற்கள் :தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
Out of Stock
Add to Alert List

வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தனென்று சொல்ல கலைந்திடுமே _ தமிழ்க் கடவுள் முருகனைப் போற்றும் இந்தத் துதி, அவனுடைய பக்தகோடிகளால் உலகெலாம் துதிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட குன்றக் கடவுள் முருகனின் அவதார மகிமையை இந்த நூல் சிறப்புற எடுத்துக் கூறுகிறது; பல புதிய சுவையான தகவல்களை அளிக்கிறது.
அவசரகதியில் செல்லும் மனிதர்கள் தாம் தேடியவற்றில் வெற்றி அடைந்தாலும் ஒரு காலகட்டத்தில் பயம் கொண்டே ஆகவேண்டும். அதேசமயம் தோல்வியைத் தவிர வாழ்வில் ஏதும் கண்டறியாதவர்கள், ஒரு கட்டத்தில் விரக்தியின் எல்லைக்கே சென்றுவிடுவது இயல்பு. விரக்தியின் எல்லையிலும் தோன்றுவது பயமே. இனி என்ன செய்யப்போகிறேன், எப்படி வாழப் போகிறேன் என்ற பயம்.

அந்த நேரத்தில் யாமிருக்க பயம் ஏன்? என்று நாமிருக்கும் இடம் தேடி ஓடோடி வருபவன் கந்தன். யாமிருக்க விரக்தி ஏன் என்றோ, வேறு வேத வாக்கியங்களையோ அவன் உதிர்க்கவில்லை. வெற்றி பெற்றாலும் தோல்வியுற்றாலும் இறுதியில் அச்சம் தலைதூக்கி நிராயுதபாணியாக மனிதன் நிற்பான் என்று அந்த தண்டாயுதபாணி அறிவான். நம்முடைய சோதனையான காலத்தில் அவனை நாம் சென்று அடையவேண்டும் என்பதில்லை. குழப்பமான நிலையில் அது சாத்தியமுமல்ல... அவனே ஓடோடி வரவேண்டும். அதற்காகவே குமரன் உலகெங்கும் ஆலயங்களில் குடியிருக்கிறான்.

இவ்வுலகில் முருகக் கடவுளின் திருத்தலங்கள் எங்கெல்லாம் அமைந்திருக்கின்றன, அதன் சிறப்பு, விசேஷ காலங்களில் அந்தக் கோயில்களில் நடைபெறும் விழாக்கள், அந்தக் கோயில்களில் முருகனின் வரலாறு, அவனுடைய லீலைகள், அண்டை நாடுகளிலும் ஆலயங்களில் இருந்துகொண்டு எப்படி அவன் அருள்பாலிக்கிறான்; தமிழகத்தில் சீர்மிகுந்து காணப்படும் அவனுக்குரிய சிறப்பான இடங்கள் எவை... என்பன போன்ற வரலாற்றுத் தகவல்கள் அனேகம் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன.

தென்னகத்தில் தமிழ்க்கடவுளாக வணங்கப்படும் முருகன், வடக்கே ஸ்கந்தனாக அறியப்படும் அந்த அழகன், இன்னும் தமிழர்கள் எங்கெல்லாம் பரவியுள்ளார்களோ அந்த நாடுகளில் எல்லாம் தன் அருட்பார்வை சாம்ராஜ்யத்தைப் பரவவிட்டுள்ள முருகனின் அவதாரத்தில், நமக்குத் தெரியாத புதிய விஷயங்களையும், பல தலங்களைப் பற்றிய சுவையான தகவல்களையும் இந்த நூல் மூலம் அறியலாம்.