book

தீரன் சின்னமலை

Theeran chinnamlai

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சூலூர் கலைப்பித்தன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :111
பதிப்பு :2
Published on :2008
ISBN :9788189936624
குறிச்சொற்கள் :பழங்கதைகள், வீரர், போராட்டம், பிரச்சினை, போர், அரசர்கள், சரித்திரம்
Out of Stock
Add to Alert List

இந்திய சுதந்திரப் போராட்டம் சிப்பாய் கலகத்திலிருந்து தீவிரம் அடைந்தாலும் கூட, அதற்கு முன்பே தமிழகத்தில் விடுதலைக்கான விதைகள் தூவப்பட்டன. பூலித்தேவன், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் வரிசையில் தீரன் சின்னமலையும் விடுதலை வேள்வியைத் தொடங்கிவைத்தவ் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு பிடிக்க வந்த வெள்ளையர்கள், இந்தியாவில் சிதறுண்டுக் கிடந்த அரசர்களையும் குறுநில மன்னர்களையும் பார்த்து வியாபார வலை வீசினார்கள்.  வெள்ளைய்கள் சூழ்ச்சி செய்து பின்னால் நம் தேசத்தையே சூரையாடப் போவது தெரியாமல் அரச்களும் குறுநில மன்னர்களும் அவர்களுக்கு ஆதரவு தந்தனர்.

இதை ஒரு வாய்ப்பாக் பயன்படுத்திக்கொண்ட வெள்ளையர்கள், ஆக்டோபஸ் போல கொஞ்சம் கொஞ்சமாக நம்மை வளைத்துச் சுறண்டத் தொடங்கி, இறுதியாக நம்மிடமே வரி வசூல் செய்து, நம் தேசத்துக்குள் இருந்துகொண்டு நம்மையே அடிமைப்படுத்தினார்கள்.

இந்தச் சூழலை நன்கு உணர்ந்து பொறுக்க முடியாமல் ஆர்ப்பரித்த வீர்ர்களில் ஒருவன்தான் தீரன் சின்னமலை.  வெள்ளையர்களை விரட்டியடிக்க முடியாவிட்டாலும், அன்னியர்களின் கண்களில் விரல் விட்டு கலங்கச் செய்து, கொங்கு நாட்டில் எண்ணற்ற வீர இளைஞர்கள் வளர வித்திட்டான் தீரன் சின்னமலை.

வரலாற்று வீரனான தீரன் சின்னமலையைப் பற்றிய இந்த நூல், இந்திய சுதந்திரப் போராட்டத்தைப்ப பற்றி தெரிந்துகொள்ள நினைப்பவர்களும் உதவியாக இருக்கும்.

- பதிப்பாளர்