book

அம்மன் பூவோடு

Amman Poovodu

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சூர்யகாந்தன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :167
பதிப்பு :2
Published on :2004
ISBN :9788123407562
குறிச்சொற்கள் :பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், நாட்டுப்புறப் பாடல், கொங்கு நாட்டுக் கிராமியச் சொல்
Add to Cart

கொங்கு நாட்டுக் கிராமியச் சொல் அலங்காரத்துடன் உயிர்த்துடிப்புள்ள கதைகளை யதார்த்தமாக உருவாக்குவதில் வல்லவர் படைப்பாளர் சூர்யகாந்தன் அவர்கள். "அம்மன் பூவோடு'' என்ற இந்தப் புதினத்தில் உணர்வுக் கதிர்கள் வார்த்தைகளாக, வரிகளாக வடிவெடுக்கின்றன.

 அந்த மரத்தில் பூச்சாண்டி இருக்கிறது, இந்த மரத்தில் வேதாளம் இருக்கிறது என்று பெற்றவளால் பயமுறுத்தி வளர்க்கப்பெற்றான் பொம்மன். வளர்ந்த பிறகு சமுதாயத்தில் நடக்கின்ற அக்கிரமங்களைக் கண்டு ஆவேசம் கொள்கிறான். கைகளில் வளையல்கள் அணிந்து, கால்களில் கொலுசுகள் போட்டு, பாவாடை கட்டி வளர்க்கப் பட்ட அவன் அநியாயக்காரர்களைத் தாக்குகின்ற ஆற்றல் பெறுகிறான். ஊரில் பிறக்கின்ற ஒவ்வொரு ஆற்றல் பெருகிறான். ஊரில் பிறர் ஒவ்வொரு குழந்தைக்கும் வாயில் முதல் சொட்டுப்பாலை ஊற்றுவதற்கேற்ற வீரமகன் பொம்மன்தான் என்று அழைத்துச் செல்லும் அளவுக்கு ஊராரால் மதிக்கப்படுகிறான். காதல் உணர்வுக்கும் கட்டுப்படுகிறான். பெரிய இடத்துக் காதலுக்கு எதிர்ப்பு கிளம்புகிறது. அவன் உயிருக்குக் குறிவைக்கப்படுகிறது. மரணத்தைச் சந்தித்தானா? மணமாகி வாழ்ந்தானா? எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திப் பல இடங்களில் திசை திருப்புகிறார் படைப்பாளர்.