book

பொன்னிவனத்துப் பூங்குயில்

Ponnivanathu poonguyil

₹115+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கொத்தமங்கலம் சுப்பு
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :400
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788189936341
குறிச்சொற்கள் :நிஜம், காதல், பொக்கிஷம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள்
Out of Stock
Add to Alert List

குயிலி என்னும் குயிலின் கீதம் இது. ஒரு திரைப்படத்துக்கு உரிய அத்தனை அம்சங்களோடும் விறுவிறுப்போடும் எழுதப்பட்ட 'பொன்னிவனத்துப் பூங்குயில்' வெறும் கதையல்ல... நிஜங்களும் சரிவிகிதத்தில் கலந்து படிப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் காவியம்! குயிலி தன் கூட்டாளிகளோடு தஞ்சை மண்ணில் நடத்துகிற சேட்டைகளைப் படிக்கும்போது, நாமும் அவர்களுடன் குதித்துக் கும்மாளம் போடலாம்.
புகழ்மிக்க கதாநாயகனுக்கே உரிய தகுதியோடு, இளவரசர் பிரதாபசிம்மன் வெவ்வேறு வேடங்கள் தரித்து, தன்னை வெளிக்காட்டாமல் நடத்தும் நாடகங்களில், நாமே வேடமிட்டு உலா வரும் உணர்வு ஏற்படுகிறது.

காவிரி பற்றிய வர்ணனையில் சிலிர்ப்பும் பிரமிப்பும் தோன்றுகிறது. பயணம் செல்லும்போது காவிரி குறுக்கிடும் இடங்களில், சில்லிடும் சாரலில் நம்மை இழந்து பாலம் கடக்கும் நாம், இந்தக் கதையைப் படித்தபின், காவிரி அன்னையை கண்களில் வழியும் நீரோடு வழிபடுகிறோம். 'அவனுக்கென்ன... ராஜா மாதிரி வாழ்க்கைடா!' என்று சொகுசு ராஜாக்களை மட்டுமே அறிந்திருக்கின்ற நமக்கு, அந்த ராஜாக்களும் இன்றைய அரசாங்க மந்திரிகளைப் போல, காலை எழுந்ததுமே 'நான்தானே இன்னும் ராஜா..?' என்று கேட்டுத் தெளிவு பெறும் அளவுக்கு சூழ்ச்சிக்குள் சிக்கியிருந்தார்கள் என்ற அதிர வைக்கும் உண்மை உறைக்கிறது.

இப்படி, நாவல் முழுக்க எது உண்மை, எது கற்பனை என்று இனம் பிரிக்க முடியாத அளவுக்கு நகர்கிற கதையின் உச்சக்கட்டத்தில் வேகமும் பரபரப்பும் தெறிக்கிறது; இதயம் படபடக்கிறது.

மனதை உலுக்கும் காதல் கதை, ஒரு சாம்ராஜ்யத்தில் இத்தனை மாற்றங்களை உண்டுபண்ணியதா என்று அதிர்ச்சி அலையிலிருந்து வெளியே வரமுடியாமல், புத்தகத்தை மூட மனமின்றி, திகைத்து நிழலாட வைக்கிறது.

சுமார் 50 வருடங்களுக்கு முன் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய 'பொன்னிவனத்துப் பூங்குயில்' இன்றும் உயிரோட்டமுடன் நம்மை உலுக்குகிறது.