book

நோன்பு

Nonbu

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டி. செல்வராஜ்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :116
பதிப்பு :1
Published on :2005
ISBN :9788123409474
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், சிறுவர்கதைகள்
Add to Cart

பழகிப்போன விஷயங்கள், உளுத்துப்போன சிந்தனைகளைத் தாண்டி இன்னும் மெருகு குலையாமல் 1958இல் எழுதப்பட்ட நோன்பு எனும் இச்சிறுகதைகளின் முதற் தொகுப்பின் மறுபதிப்பு இன்றைய காலகட்டத்தின் ரசளையின் போட்டியில் நின்று முதன்மைபெறுவது ஆச்சர்யம். பழங்காலத்து சம்பிரதாயங்களிலும், பழக்கவழக்கங்களிலும் உருகிக்கிடக்கும் நமது பாரம்பர்யம் வளர்ச்சியடையா சில மடைமைகளினால் சீர்குலைத்து கண்டு கலக்கமுறச் செய்யும் நூலின் ஒரிரு இடங்கள். பதவியும், வசதியும் அவரவர் மேற்கொண்ட கொள்கையின் பிடிப்பாதல் தளராது பெற்றவைதானே தவிர பிறப்பால் ஏற்பட்டதில்லை. நிலமும் ஆதிக்கமும் எஜமானர்களின் முதுகெலும்பாய் இருக்கும்பொழுது; அண்ணாந்து கிடக்கும் வறண்ட நிலமாய் தொழிலாளர்வர்க்கம் தவிப்பாய்தான் கிடக்க வேண்டும் என்பது நியதியல்ல; அவர்கள் பணபலத்தின் மூலக்கரு யாரால் உற்பத்தி செய்யப்படுகிறது என சிந்தித்துப் பார்க்க வேண்டுமல்லவா?