book

என் தந்தையின் வீட்டை சந்தையிடமாக்காதீர்!

En Thanthaiyin Veetai Santhaiyidamaakaatheer!

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யூ.மா. வாசுகி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :79
பதிப்பு :4
Published on :2008
ISBN :9788123413907
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Add to Cart

என் அம்மா...

உன் ஒரு முலையிலிருந்து மறு முலைக்கு என் உதடுகளை மாற்றிக்கொள்ளும் நேரமிது. பிரிவென்று கருதாதே.
 என் தமக்கையே நெடுவழியில் நான் உன் சுட்டுவிரல் விட்டு நடுவிரல் பற்றிக்கொள்ளும் பொழுது இது தீண்டலற்ற இடைநொடி தனிமையோ என்று திகைக்காதே. என் தங்களையே உன்னைத் தியானிக்கும் என் மனம் இமைக்கும் தருணமிது. அச்சமய இருட்டில் நீ மூரளாதிரு. உறங்கு என் மகளே தோள் மாற்றிச் சுமக்கவே உன்னை என் நெஞ்சிலிருந்து அகற்றுகிறேன். ஐயோ இது விலகலோ என்று திடுக்கிட்டு விழித்துவிடாதே. சகலமுமான என் பிரியமே இன்று நாளெல்லாம் உன் நினைவால் எத்தனை முறை மனம் ததும்பி கண்ணீர் வரப் பார்த்தது.