book

பாகப்பிரிவினைச் சட்டங்களும் உயில் சட்டங்களும்

Paagapirivinai Sattangal Uyil Sattangal

₹95+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலமை வேங்கடாசலம்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :148
பதிப்பு :4
Published on :2011
ISBN :9788188049271
Out of Stock
Add to Alert List

இந்துக்கள், இசுலாமியர், கிறத்துவர் தம் கூட்டுக்குடும்பத்தில் ஒவ்வொரு நபருக்கும், கூட்டுக்குடும்பச் சொத்தில் எவ்வளவு பாகம் உண்டு என்பதனையும், கூட்டுக் குடும்பச் சொத்திதில் பெண்களுக்குப் பாகம் உண்டா? இல்லையா? என்பதனையும் நபர்கள் பலர் அறியாது இருக்கிறார்கள்.

இந்து, இசுலாம், கிருத்துவ மதச்சட்டங்களில் பெண்களுக்குச் சொத்தில் பங்சூரிமை இருக்கும் போது, பல பெண்கள் அதனை அறியாது விடுக்கின்றனர். சில பெண்கள் பிறந்த இடத்துடன் வீணே பிரச்சினைகளை வைத்துக்கொள்ள வேண்டாமென, கூட்டுக்குடும்பச் சொத்தில் பாகம் கேட்காது விட்டு விடுகின்றனர்.

இந்து, இசுலாம், கிறித்துவர்களில் எவர் பாகம் கோரினும் கோரா விட்டாலும், அவரவருக்கும் கூட்டுக்குடும்பச்சொத்தில் பாகம் எவ்வளவு கிடைக்கும் என்பதனையும், உயில் என்றால் என்ன? சுவீகாரம் என்றால் என்ன? பாகப்பிரிவினை வழக்குத் தொடுப்பது எவ்வாறு, சுவீகார ஆவணம், உயில் ஆவணம் எழுதுவது எப்படி? ஆகியனப்பற்றி இந்த நூலின்கண் விரிவாக விவரித்துள்ளேன்.