book

குரு தரிசனம்

Guru tharisanam

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா.சு. ரமணன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788189936211
குறிச்சொற்கள் :தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
Out of Stock
Add to Alert List

தெய்வத் திருத்தலங்கள் நிறைந்த, தெய்வத் திருத் தொண்டர்கள், ஆன்மிகப் பெரியோர்கள் தோன்றி வாழ்ந்த தெய்வீக பூமி தமிழகம். தவயோகிகளும், சித்தர்களும், ஞானிகளும் ஆன்மிகச் சிந்தனையைப் பரப்பியதோடு, தம்மை நாடிவரும் அன்பர்களுக்கும், சீடர்களுக்கும் தமது தவயோக சக்தியால் மனக்குறை நீக்கி, உடல் பிணியும் நீங்கச் செய்துள்ளனர். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பதை நிரூபிக்கும் விதமாக வாழ்ந்தும் காட்டியுள்ளனர்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதை உணர்த்தும் வகையில் தாய் தந்தையர்க்கு அடுத்து குருவுக்கு சேவைகள் செய்து, உண்மையான சீடனின் கடமையைப் பூர்த்தி செய்து, அதன் பிறகு சந்நியாச தீட்சை பெற்று தெய்வீக நிலையை அடைந்தவர்களும் உண்டு. இளம் வயதிலேயே தெய்வீகப் பாதையில் ஈர்க்கப்பட்டு சந்நியாசம் பெற்றவர்களும் உண்டு. சம்சாரக் கடலில் வீழ்ந்து பிறகு தெய்வீக ஞானம் அடையப் பெற்று சந்நியாசம் பெற்றவர்களும் உண்டு.

அத்தகைய தவயோக நிலையை அடைந்த சித்தர்களும், யோகிகளும் தம்மை நிந்தித்தவர்களுக்கும், தமக்குத் துன்பம் விளைவித்தவர்களுக்கும் கூட அருள் புரிந்துள்ளனர். இவர்கள் தங்களது தவயோகத்தால் வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்து வந்த போதும், ஞான திருஷ்டியால் ஒருவரை ஒருவர் அறிந்து வைத்திருந்தனர். தம்மை நம்பிய அடியார்களின் துன்பச் சூழலை ஞான திருஷ்டியால் கண்டு துயர் துடைக்கும் வல்லமை பெற்றிருந்தனர். அப்படிப்பட்ட தவயோகமும் ஞானமும் தெய்வீக சக்தியும் குருவின் ஆசியும் பெற்ற யோகிகள் பற்றிய சுவையான தகவல்களை இந்த நூலில் தந்துள்ளார் இந்நூலாசிரியர்.

குரு தரிசனம் என்ற இந்நூல் வாயிலாக, தவ ஞானியர் பத்து பேருடைய வாழ்க்கையைப் பற்றியும், அவர்களின் தெய்வத் திருத்தொண்டைப் பற்றியும், இவர்களோடு தொடர்புடைய முக்தித் தலமான திருவண்ணாமலையின் மகத்துவத்தைப் பற்றியும் ஆன்மிக உணர்வு ஓங்கத் தெரிவித்துள்ள பாங்கு நிச்சயம் வாசகரை ஈர்க்கும். ஆன்மிக நாட்டமுள்ள அன்பர்களுக்கு இந்நூல் ஊக்கமும் ஆன்ம ஞானமும் நல்கும்.