book

ராஜதந்திரி

Rajathanthiri

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ. சிவக்கண்ணன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :134
பதிப்பு :3
Published on :2005
ISBN :9788177350555
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, பதவி ஆசை
Add to Cart

''ராஜதந்திரி'' என்ற இந்த நூலின் ஆசிரியர் முனைவர் அ. சிவக்கண்ணன் அவர்கள் மதுரைக் காமராஜர் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர். ஒரு முற்போக்கு எழுத்தாளர், மக்களின் யதார்த்த வாழ்க்கையை விளையும் நாடகங்களையும் எழுதியுள்ளார். ' ராஜதந்திரி ' மற்றும் 5 நாட்கங்களின் தொகுப்பே இந்நூல்.

பதவி ஆசைபிடித்து அலையும் ஒரு மனிதர், திருமண வயதில் ஒரு மகன் இருக்கும்போதே, ஒரு இளம் பெண்ணை இரண்டாம் தரமாக மணம் செய்து கொள்வது எவ்வாறு மகனை சாமியாராக்கியது என்பதைச் சித்தரிக்கிறது ' ராஜதந்திரி'. விளையும் கேடு, தனக்காக மட்டுமே வாழநினைக்கும். சுய நலப்போக்கு, சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற மோகம் இளம் பெண்களை ஆட்கொள்வது ஆகியவற்றை மற்ற நாடகங்கள் எடுத்துக்கூறுகின்றன. ஒவ்வொரு நாடகத்திலும் ஒரு செய்தி உள்ளது. எவ்வாறு இளம் தலைமுறையினரிடையே முற்போக்கு சமுதாயக் கண்ணோட்டம் வளர்ந்து வருகிறது என்பதை அசிரியர் எடுத்துக்காட்டுவது இந்த நாடகங்களின் சிறப்பு அம்சம்.