book

மருதுபாண்டியன் சரித்திர நாடகம்

Maruthupandiyan Sarithira nadagam

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தொ.மு.சி. ரகுநாதன்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :நாடகம்
பக்கங்கள் :134
பதிப்பு :8
Published on :2016
ISBN :9788188048465
குறிச்சொற்கள் :சரித்திரம், தலைவர்கள், அரசர்கள்
Add to Cart

' மருது பாண்டியன்' என்னும் இந்நூல் ஒரு சரித்திர நாடகநூல். இந்நூலில் இடம்பெறும் கதாபத்திரங்களின் வாயிலாக, தொ.மு.சி. ரகுநாதன் வாசகர்களிடம் பேசுகிறார். '' நாங்கள் ஆளப் பிறந்தவர்கள். கறுப்பர்கள் எங்களுக்கு அடிமைகள் ஆகப் பிறந்தவர்கள்.'' என்று வெள்ளையன் கொக்கரிக்கிறான். '' வெள்ளையர்களான உங்கள் ஆட்சியை முறையிலேயே கிள்ளியெறியாமல் அதனை வேரோடு வளரவிட்டுத் தவிக்கிறோமே அது ஒன்றுதான் நாங்கள் செய்த குற்றம்'' என்று வெள்ளைமருது வாயிலாகத் தன் மனக்குமுறலைக் கொட்டுகிறார். '' வெள்ளையர்கள் நம்மிடையே விதைத்துச் சென்ற ஜாதிவெறி, இனவெறி, மொழிவெறி, மதவெறி முதலியவற்றால் நாம் நூற்றாண்டு காலமாக அடிமையாக இருந்தோம். இன்று வெள்ளையர்கள் வெளியேறிவிட்டார்கள். எனினும் அவர்கள் விதைத்துச் சென்ற விஷவித்துக்களான வெறி உணர்ச்சிகள் நம்மைவிட்டுக் குடியோடிப் போயிற்றா? அந்த வெறியுணர்ச்சியின் மிச்சசொச்சங்கள் இன்னும் நம் வாழ்வைப் பாதிக்கவில்லையா?'' என்ற வரிகளால் மக்களுக்கு நாட்டுப் பற்றுணர்வை ஊட்டுகிறார். '' ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே'' என்று பாரதியின் வரிகளைக்கொண்டு பாடம் புகட்டுகிறார்.