-
பெரும்பான்மை இந்திய ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட விளையாட்டு கிரிக்கெட். நமது தேசிய விளையாட்டாக ஹாக்கி இருந்தபோதிலும், கிரிக்கெட்டுக்கு இருக்கும் மவுசு வேறு எதற்கும் கிடையாது. மூன்று குச்சியும் ஒரு மட்டையும் பந்தும் கிடைத்துவிட்டால் போதும், பள்ளிச் சிறுவர்களின் மனசுக்குள் சந்தோஷப் பூ என்னமாய்ப் பூக்கிறது...! கிரிக்கெட்டில் இந்திய அணி வென்றுவிட்டால் மனசில் மகிழ்ச்சி தாண்டவமாடுவதையும், தோற்றுவிட்டால் கன்னத்தில் கைவைத்து எதையோ பறிகொடுத்த நிலைபோல் சோகமாக இருப்பதையும் பலரிடம் பார்க்கிறோம். விளையாட்டுகளில் வெற்றி தோல்வி சகஜமென்றாலும் நம் அணியினர் மீது வைத்துள்ள அளவுகடந்த அபிமானத்தால் எப்போதும் நம் அணி வெற்றி பெறவேண்டும் என்று எண்ணுகிறது இந்திய மனம். உண்மையில் இந்த எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இந்திய கிரிக்கெட் அணி உள்ளதா? இந்தியா ஏன் முதலிடத்தில் இல்லை! இவற்றை அலசுகிறது இந்தப் புத்தகம்.
கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு. ஒட்டுமொத்த அணியின் சிறப்பான செயல்பாடுகளே நிரந்தர வெற்றியை அணிக்கு தேடித் தரும். ஆனால் இந்திய கிரிக்கெட்டில் நடந்தது என்ன?
உலகிலேயே அதிக சதங்கள் ஒருநாள் போட்டிகளிலும், ஐந்து நாள் போட்டிகளிலும் அடித்த நபர் ஒரு இந்தியர்தான். அதிக ரன்களைக் குவித்தவரும் இந்தியர்தான். ஒரே இன்னிங்ஸில் அதிக விக்கெட்டை எடுத்தவரும் இந்தியர்தான். பார்ட்னர்ஷிப்களில் முதலிடத்தில் இருப்பதும் இந்தியாதான். இருந்தும் இதுவரையிலான கிரிக்கெட் வரலாற்றில், இந்திய அணி தரவரிசையில் முதலிடத்தில் ஒருநாள் கூட இருந்தது கிடையாது. இது மிகவும் ஆச்சரியமான விஷயம். ஒருவகையில் அவமானகரமான ஒன்றும்கூட!
உலகில் உள்ள கிரிக்கெட் வாரியங்களிலேயே அதிக வருவாயைக் கொண்டது நமது வாரியம்தான். உலகிலேயே கிரிகெட்டுக்கு அதிக பார்வையாளர்கள் உள்ள நாடும் இந்தியாதான். இந்திய அணியின் மீது நம்மில் பலருக்கும் இருக்கும் உள்ளத் தவிப்பை இந்த நூலில் பதிவு செய்து, இந்தியா முதலிடம் பெற மேற்கொள்ள வேண்டிய தீர்வுகளையும் அலசியுள்ளார் நூலாசிரியர் மகாதேவன்.
-
This book Mythaana utham is written by Mahadevan and published by Vikatan Prasuram.
இந்த நூல் மைதான யுத்தம், மகாதேவன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mythaana utham, மைதான யுத்தம், மகாதேவன், Mahadevan, Vilayattu, விளையாட்டு , Mahadevan Vilayattu,மகாதேவன் விளையாட்டு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Mahadevan books, buy Vikatan Prasuram books online, buy Mythaana utham tamil book.
|