book

நாட்டுக்காக வாழ்ந்த தியாகச்சீலர்கள்

Naatukkaga Valntha Thiyagaseelargal

₹33+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வரதராஜன்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :111
பதிப்பு :3
Published on :2008
ISBN :9788190798037
குறிச்சொற்கள் :பெருந்தலைவர்கள், சரித்திரம், தலைவர்கள்
Add to Cart

தனது வயிறு, தன் மனைவி - மக்கள் என்று தன்னலமே கருதி வாழ்கின்ற மனிதர்களின் வாழ்நாள் முடிந்ததும் அவர்களுடைய பெயரும் மறைந்து விடும். அவர்கள் மரணப்படுக்கையில் கிடந்தாலும் யாரும் நாடி வர மாட்டார்கள். மயான்னத்துக்கு எடுத்துச் செல்லும்போதும் கூட யாரும் வரமாட்டார்கள். பாரதியின் திருவுடலை மயானத்துக்கு எடுத்துச் செல்லும்போது பதினான்கு பேர் தான் உடன் சென்றார்களாம். ஆனால் பாரதியின் மரணத்திற்குப்பின் அவரது பாடல்கள் உலகம் முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. பாரதியின் பெயர் மக்களின் நாவினில் நிலைத்து நிற்கிறது. அதற்குக் காரணம் பாரதியின் பரந்து விரிந்த சிந்தனை; தன்மை கருதாத தனிப்பண்பு.

 வீட்டுக்காக மட்டும் வாழ்ந்து வீணாகிப் போகாமல் நாட்டுக்காக வாழ்ந்த தியாகசீலர்கள் பலர், அவர்களின் வாழ்க்கை வரலாறு இனைய தலைமுறையினருக்குத் தெரிந்திருந்தால் எதிர்காலத்தில் தியாகசீலர்கள் தோன்றுவார்கள்; சொகுசு அரசியல் தொலைந்து ஒழியும்.

 நாட்டுக்காக வாழ்ந்த தியாகசீலர்கள் என்ற நூலை எழுத்தாளர் திருமிகு வரதராஜன் அவர்கள் எளிய நடையில் எழுதித் அளவில் நூல்களாக இருந்தாலும் முக்கிய விவரங்களை மட்டும் தொகுத்து, படிக்கின்றவர்களின் அறிவில் பதிவு செய்கிறார். '' இந்நூல் பொது மக்களைச் சென்றடைந்தால் அதுவே போதும் என்றும் அந்தத் தியாகிகளைப்பற்றி எழிதியதே தனக்குக் கிடைத்த பெரும்போது'' என்று பெருமிதம் கொள்கிறார் நூலாசிரியர் வரதராஜன்.